» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

துறைமுகத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி : பொதுமக்கள் ஏமாற வேண்டாம்.. அதிகாரி எச்சரிக்கை

சனி 7, அக்டோபர் 2017 5:02:05 PM (IST)

துறைமுகத்தில் வேலை வாங்கி தருவதாக எவரேனும் விண்ணப்பம் கோரினாலோ உறுதியளித்தாலோ அதனை நம்ப வேண்டாம் என தூத்துக்குடி துறைமுக அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இனயம் துறைமுக திட்டப்பணிகளுக்கான சிறப்பு அதிகாரி நடராஜன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் இனயம துறைமுகம் அமைப்பதற்கான அனைத்து வகையான முதற்கட்ட செயல்பாடுகளை தற்பொழுது வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களால் மேற்கொள்ளப்படுகிறது. 

பொதுமக்களை ஏமாற்றும் வகையில் பணம் சம்பாதிக்கும் நோக்குடன் சிலர் நாங்கள் இனயம் துறைமுகத்தின் பிரதிநிதிகள் மற்றும் மனிதவள முகவர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு துறைமுகத்தில் வேலை வாய்ப்புக்கான விண்ணப்பங்களை கோருகின்றனர். இனயம்  துறைமுகத்தில் வேலை வாங்கி தருவதாக எவரேனும் விண்ணப்பம் கோரினாலோ உறுதியளித்தாலோ அதனை நம்ப வேண்டாம்.

இனயம் துறைமுகத்தில் நிரந்தர ஆட்சேர்ப்புக்காக எந்த ஒரு தனி நபரையோ நிறுவனத்தையோ துறைமுகசபை நியமிக்கவில்லை, ஆகவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருப்பதோடு இப்படிபட்ட மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுவர்களிடம் மாட்டிக் கொள்ள வேண்டாம் என்று கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.  இனயம் துறைமுக வேலை வாய்ப்பு சம்பந்தமாக பொது மக்கள் தங்கள், வேலை வாங்கி தருவதாக வரும் பொய்யான தகவல்களை நம்பி யாரிடமும் பணப்பட்டுவாடா செய்ய வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமையப்பெற இருக்கும் இனயம் துறைமுகத்திற்கு ஆள்சேர்ப்பு, இத்திட்டம் செயல்பாட்டிற்கு வரும்பொழுது தொடங்கும். மேலும் ஆள்சேர்ப்பு பணி, துறைமுகத்தின் மூலமாக அரசு விதிகள் பின்பற்றி நாளேடுகளில் விளம்பரம் செய்தும், இணையத்தளங்களிலும் விளம்பரம் செய்து முறைப்படி நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

உண்மைOct 9, 2017 - 12:41:14 PM | Posted IP 122.1*****

தகவலுக்கு நன்றி! ஜெய் ஹிந்த்!

Sakthivelmurugan.AOct 8, 2017 - 05:15:28 PM | Posted IP 157.5*****

Timely warning,please give through other medias

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Universal Tiles Bazar

selvam aqua


New Shape Tailors



Nalam Pasumaiyagam


Johnson's Engineers




Thoothukudi Business Directory