» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் பல கோடி முறைகேடு : அதிகாரிகள் - ஒப்பந்ததாரர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு

செவ்வாய் 3, அக்டோபர் 2017 5:11:25 PM (IST)

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் சாலைகள் மற்றும் பல்வேறு விரிவாக்க பணிகளுக்கு ஒரே நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கியதில் பல கோடி முறைகேடு நடந்துள்ளது. இதையடுத்து துறைமுக அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தம் பெற்ற நிறுவனத்தின் மீது சிபிஐ வழக்குபதிவு செய்துள்ளது. 

தமிழகத்தில் வளர்ந்து வரும் துறைமுகங்களில் தூத்துக்குடியில் உள்ள வஉசி துறைமுகமும் ஒன்று. இந்த துறைமுகத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதனால் முக்கிய ஒப்பந்த பணிகளை தனியார் நிறுவனமாக இமானுவேல் அண்ட் கோ மற்றும் அதன் தொழில் கூட்டாளியான பி.ஐ. ஜம்பர் மதுரம் ஆகியோர் செய்து வருகின்றனர். 

இந்நிலையில் துறைமுகத்தில் காற்றால் ஏற்படும் அலைகளை கட்டுப்படுத்தி சாலைகள் அமைக்க துறைமுகம் சார்பில் ரூ.13.04 கோடிக்கு இமானுவேல் அண்ட் கோ மற்றும் பி.ஐ. ஜம்பர் மதுரம் ஆகியோருக்கு கடந்த 2014-16ம் ஆண்டு ஒப்பந்தம் விடப்பட்டது. ஆனால் அவர்களுக்கு அளிக்கப்பட்ட காலத்திற்குள் இந்த பணிகள் முறையாக முடிக்கவில்லை. 

இதற்கிடையே கூடுதல் பணியாக, தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் இருந்து, தூத்துக்குடி வஉசி துறைமுகத்திற்கு இடையே சரக்குகள் கையாளும் வகையில் சாலைகள் அமைக்க ரூ.38.88 கோடி ஒப்பந்த பணிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த பணிகளும் சரிவர செய்யப்படவில்லை. மேலும், கூடுதல் பணியாக துறைமுகத்திற்கு வரும் கன்டெய்னர் லாரிகள் நிறுவத்துவதற்கு ஏதுவாக ரூ.26.31 கோடி பார்க்கிங்கிற்கான ஒப்பந்தமும் வழங்கப்பட்டுள்ளது. 

முதல் பணியே அந்த தனியார் நிறுவனம் சரியாக முடிக்கப்படாத நிலையில் குறுகிய காலத்தில் தொடர்ந்து அடுத்துடுத்து மூன்று பணிகள் இமானுவேல் அண்ட் கோ மற்றும் பி.ஐ. ஜம்பர் மதுரம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இது திட்டமிட்டு அந்த நிறுவனத்திற்கு ஆதரவாக துறைமுகம் நிர்வாகம் சார்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தது. மேலும் ஒப்பந்தம் விட்டதில் பலகோடி முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் புகார் எழுந்தது. 

இதையடுத்து தூத்துக்குடி வஉசி துறைமுகம் விரிவாக்கம் பணிகளில் துறைமுக அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தம் பெற்ற நிறுவனம் பல கோடி முறை கேட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மத்திய புலனாய்வு பிரிவு, துறைமுக அதிகாரிகள் மற்றும் ஒப்பந்த நிறுவனத்தின் மீது வழக்குபதிவு செய்து உள்ளது. 

மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகளின் முதற்கட்ட விசாரணையில் திட்டமிட்டு இமானுவேல் அண்ட் கோ நிறுவனத்திற்கு ஒப்பந்தம் விடப்பட்டது தெரியவந்துள்ளது. இதனால் இந்த வழக்கில் துறைமுக நிர்வாகத்தில் உள்ள முக்கிய அதிகாரிகள் பலர் சிக்கி உள்ளதால் விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. 


மக்கள் கருத்து

ராஜன்Oct 5, 2017 - 02:15:26 PM | Posted IP 27.62*****

தூத்துக்குடியில் போர்ட் அமைத்ததே குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க மட்டும் தான் போலிருக்கிறது. போன மாதம் கஸ்டம்ஸில் முறைகேடு. இந்த மாதம் போர்ட் ட்ரஸ்டில் முறைகேடு. தண்டனைகள் கூடினால் தான் தவறுகள் குறையும்.

உண்மைOct 4, 2017 - 01:13:57 PM | Posted IP 122.1*****

திருட்டு மூடர்கள்!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

crescentopticals


New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph MarketingThoothukudi Business Directory