» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தெப்பக்குளம் அம்மன் கோவிலில் சூரசம்ஹாரம் கோலாகலம்

சனி 30, செப்டம்பர் 2017 8:40:33 PM (IST)




துாத்துக்குடியில் அம்மன் கோவில்களில் சூரசம்ஹாரம் கோலாகலமாக நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

தமிழகம் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் நவராத்திரி திருவிழா வெகு விமா்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு நவராத்திரி திருவிழா கடந்த 21 ம் தேதி தொடங்கியது. இதில் துாத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் வடபாகம் சந்தன மாரியம்மன் கோவில் மட்டக்கடை உச்சினி மாகாளியம்மன் கோவில் மேலசண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவில்,2ம் ரயில்வே கேட் பத்திரகாளியம்மன் காேவில் உட்பட 20க்கும் மேற்பட்ட கோவில்களில் கொடியேற்றத்துடன் தசரா உற்சவ விழா தொடங்கியது.
 
தினசரி அம்மன் பல்வேறு அலங்காரத்துடன் இரவு கொலுவில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து 10ம் நாள் திருவிழாவான இன்று (30 ம் தேதி) மாலை மகிஷாசூரன் அலங்காரத்தில் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது . இதில் நரகாசூரனின் 7 தலைகள் வெட்டப்பட்டது. இதில் முதல் தலையாக யானைதலை,தொடர்ந்து மான், சிங்கமுகன், தன்தலை, சேவல்,நரகாசூரன் ஆகிய 6 தலைகள் வெட்டப்பட்ட பின்பு 7 வது தலையாக மாடு தலையுடன் வந்த சூரனை அம்மன் வதம் செய்து தன் காலுக்கடியில் வைக்கப்பட்டது. பின்னர் அம்மன் சாந்தியடையும் விதமாய் சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் இரவு அனைத்து கோயில்களிலும் அம்மனுக்கு படைப்பு பூஜை நடந்தது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals






New Shape Tailors



Thoothukudi Business Directory