» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இந்தியா முழுவதும் 50 தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கிளைகளில் ஆதார் சேவை மையம் தொடக்கம்

புதன் 27, செப்டம்பர் 2017 1:36:57 PM (IST)தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி இந்தியா முழுவதும் உள்ள வங்கியின் 50 கிளைகளில் ஆதார் சேவை மையங்களை தலைமை செயல்அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் கே.வி ராமமூர்த்தி தொடங்கி வைத்தார்.

துாத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி இந்தியா முழுவதும் 508 கிளைகளை கொண்டு செயல்பட்டு வருகிறது. இங்கு வாடிக்கையாளர்களுக்கு புதுப்புது வசதிகள் உடனுக்குடன் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, மத்திய அரசு உத்தரவின்படி அனைத்து வங்கிகளிலும் தங்கள் மொத்த வங்கி கிளைகளில் 10 சதவித கிளைகளை ஆதார் சேவை மையங்களாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்திள்ள‌து. அதன்படி பொதுமக்களுக்கு சேவையாற்றிடும் வகையில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி இந்தியா முழுவதும் 50 கிளைகள் ஆதார் சேவை மையங்களாகவும் மாற்றப்பட்டுள்ளது.

இந்த சேவையினை தூத்துக்குடி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் கே.வி ராமமூர்த்தி தொடங்கி வைத்தார். விழாவில், அவர் பேசுகையில், நாம் இந்தியன் என்பதற்கான அடையாளம் ஆதார் கார்டுதான். இந்த ஆதார் சேவை மையங்களை முதன்முதலில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தான் செயல்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களும், பொதுமக்களும் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். இப்பணிகளுக்காக வங்கியின் பணியாளர்கள் சிறப்பான முறையில் பயிற்சியளிக்கப்பட்டுள்ளனர். இந்த சேவை மையங்கள் வங்கி அலுவலக நேரங்களில் செயல்படும். தூத்துக்குடி பிரையண்ட் நகரில் உள்ள‌ எஸ்.எம்.இ. கிளையில் ஆதார் சேவை மையம் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், பொதுமேலாளர்கள் கந்தவேலு, ரவீந்திரன், நாயகம், துணை பொதுமேலாளர்கள் செந்தில் ஆனந்த், போஸ், பிரகாஷ், பார்த்தசாரதி, கணேசன், நல்லசிவம், உதவி பொது மேலாளர் ஆறுமுகபாண்டியன், கிளை மேலாளர்கள், வங்கியின் அதிகாரிகள், வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்


தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் ஆதார் சேவைக்காக துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, கோயம்புத்துார், சேலம், திருச்சி, பெரம்பலுார், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தர்மபுரி, வேலுார், மற்றும் சென்னை மாவட்ட கிளைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. புதிய ஆதார் பதிவு முற்றிலும் இலவசம். இங்கு பிறந்ததேதி, செல்போன் எண், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஆதார் தொடர்பான பதிவு மற்றும் திருத்தங்களுக்கு வாடிக்கையாளர்கள் தங்கள் அசல் ஓட்டுனர் உரிமம், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி செய்து கொள்ளலாம். இச்சேவைகள் முடிய 7 நிமிடம் முதல் 10 நிமிடங்களே ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு உத்தரவுப்படி வரும் டிசம்பர் 31 ம் தேதிக்குள் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். அவ்வாறு இணைக்கவில்லை எனில் வங்கி கணக்கு செயலிழக்கம் செய்யப்படும் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து

ஒருவன்Sep 27, 2017 - 08:42:03 PM | Posted IP 45.11*****

வாழ்த்துக்கள் .. சேவை தொடரட்டும் ..

nagarajSep 27, 2017 - 07:37:58 PM | Posted IP 117.2*****

இந்த நல்ல பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் .

parasuramanSep 27, 2017 - 03:53:10 PM | Posted IP 168.2*****

Aar

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Joseph MarketingFriends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors


crescentopticals
Thoothukudi Business Directory