» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நடிகர்கள் கட்சி ஆரம்பித்தாலும் அரசியலில் நீடிக்க முடியாது : அமைச்சர் கடம்பூர் செ.ராஜீ பேட்டி

வெள்ளி 22, செப்டம்பர் 2017 5:54:54 PM (IST)

சிவாஜி உட்பட நடிகர்கள் பலர் கட்சி தொடங்கியிருந்தாலும், அரசியலில் அவர்களால் நீடிக்க முடியவில்லை என அமைச்சர் கடம்பூர் செ.ராஜீ கருத்து தெரிவித்துள்ளார். 

கோவில்பட்டி நகராட்சியில் குடிநீர் அபிவிருத்த திட்டப்பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நகராட்சி கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்றது. தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ கலந்து கொண்டு குடிநீர் திட்டப்பணிகள் நிலை குறித்து அதிகாரிகள், ஒப்பந்தாரர்கள் மற்றும் குடிநீர், நகராட்சி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவில்பட்டி பஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றி வணிக கட்டிடங்களை கட்ட தனியார் நிறுவனங்களை பயன்படுத்துவதில் எவ்வித தவறும் இல்லை. சமூக அக்கறையுடன் உள்ள தனியார் நிறுவனங்கள் மூலமாக இப்பணிகள் நடைபெறும் என்றும், தூத்துக்குடி நான்கவது குடிநீர்திட்டம், கோவில்பட்டி 2வது குடிநீர்திட்ட பணிகள் முடிவுற்று வரும் நவம்பர் 22ம் தேதி மக்கள் பயன்பாட்டிற்றாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்க இருப்பதாக தெரிவித்தார்

மேலும், நடிகர்கள் சிவாஜி கணேசன், கே.பாக்கியராஜ், டி.ராஜேந்தர் என பலர் கட்சி ஆரம்பித்தாலும், அரசியலில் அவர்களால் நீடிக்க முடியவில்லை. நடிகர் கமல் - அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு அரசியலில் எவ்வித தாக்கமும் ஏற்படுத்தாது. யார் கட்சி ஆரம்பித்தாலும் அதிமுகவுக்கு பாதிப்பு ஏற்படாது என்றார். நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், ராமசந்திரன் அய்யாதுரை, கோவில்பட்டி கோட்டாட்சியர் அனிதா, கோவில்பட்டி நகர் மன்ற ஆணையர் அட்சய்யா, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அனிதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் டி.நவாஸ்கான், உதவி செயற்பொறியாளர்கள் லெட்சுமணன், விஜயபாலன், செந்தூர்பாண்டியன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

சத்திரியன்Sep 22, 2017 - 08:56:14 PM | Posted IP 141.0*****

ஐயா எங்கள் 👍மக்கள் திலகம் நடிகர் தான். உங்கள் தலைவி 👍 அம்மா நடிகை. மறக்க முடியுமா?.....

பொதுமக்கள்Sep 22, 2017 - 06:30:35 PM | Posted IP 171.4*****

அடுத்த எலெக்ஷன்ல நீங்க வரப்போவதில்லை ? அந்த தைரியத்தில் ஏதோ? பீனத்துறீங்க போல ? உங்க காமெடி உலகமே கைகொட்டி சிரிக்கிது ?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing

New Shape Tailors


Friends Track CALL TAXI & CAB (P) LTD


crescentopticalsThoothukudi Business Directory