» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி: விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை!

வெள்ளி 22, செப்டம்பர் 2017 11:38:43 AM (IST)தூத்துக்குடியில் மீனவர் பிரச்சனை மற்றும் தடை காரணமாக இன்று விசைப்படகுகள் அனைத்து கடலுக்குச் செல்லவிலலை. 

தூத்துக்குடியில் கடந்த 18ம் தேதி தடையை மீறி தங்குகடல் மீன்பிடித்தலுக்கு சென்றதால், 163 விசைப்படகுகளின் உரிமையாளர்கள், தொழிலாளர்களுக்கு ஒரு மாதம் தடை விதித்து, மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், 18ம் தேதி தங்கு கடலுக்கு செல்லாத 28 விசைப் படகுகள் மட்டும் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நேற்றிரவு அவர்கள் கரை திரும்பியபோது, தடை விதிக்கப்பட்ட விசைப்படகு மீனவர்கள் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 

பெரும்பாலான விசைப்படகுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சிலர் மட்டும் மீன்பிடிக்க செல்வது மீனவர்கள் மத்தியில் மோதல் போக்கை உருவாக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மீனவர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவது எனவும், அதுவரை விசைப்படகுகள் அனைத்தும் கடலுக்குச் செல்லவேண்டாம் எனவும் விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் மீனவர்கள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து இன்று விசைப்படகுகள் கடலுக்குச் செல்லவிலலை. இதனால் அனைத்து படகுகளும் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

ராய்ஸ்Sep 22, 2017 - 05:46:29 PM | Posted IP 117.2*****

இந்த முதலைகள் யாரும் வருமான வரி காட்டுவதில்லை முதலில் இந்த கீழ்ச்சாதி நாய்கள் வேறல்ல ரைட் பண்ணனும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailorscrescentopticals

Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory