» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குலசை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

வியாழன் 21, செப்டம்பர் 2017 10:26:25 AM (IST)குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. 

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுகின்றனர். இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா இன்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

இதையொட்டி அதிகாலையில் அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது கொடிப்பட்ட ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதனைத் தொடர்ந்து கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. பின்னர் கொடிமரத்துக்கு மஞ்சள், மாபொடி, சந்தனம், குங்குமம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனை நடந்தது. பின்னர் விரதம் இருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு என்ற திருக்காப்பு அணிவிக்கப்பட்டது. கொடியேற்றம் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 10-ம் திருநாளான வருகிற 30-ம் தேதி (சனிக்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையுடன் அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கடற்கரைக்கு செல்வர். அங்கு மகிசாசூரனை சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். 


மக்கள் கருத்து

சங்கர்Sep 21, 2017 - 03:18:20 PM | Posted IP 61.2.*****

ஓம் சக்தி ஜெய் சக்தி

உண்மைSep 21, 2017 - 12:53:35 PM | Posted IP 122.1*****

தாயே போற்றி! ஜெய் ஹிந்த்!

தமிழன். ரா.சேக்Sep 21, 2017 - 10:48:37 AM | Posted IP 27.62*****

தசரா திரு விழா சிறக்க மணமாற வாழ்த்துகிறேன்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsFriends Track CALL TAXI & CAB (P) LTD

Johnson's Engineers

crescentopticals


Thoothukudi Business Directory