» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தண்ணீர் லாரி மோதி ஐடிஐ மாணவர் பரிதாப சாவு: தூத்துக்குடியில் பொதுமக்கள் சாலை மறியல்

ஞாயிறு 17, செப்டம்பர் 2017 9:06:02 PM (IST)

தூத்துக்குடியில் தண்ணீர் லாரி மோதி ஐடிஐ மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி முத்தையாபுரம் சூசைநகரைச் சேர்ந்தவர் இன்னாசிமுத்து. இவரது மகன் விஜய் (23). ஐடிஐ மாணவர். இவர் இன்று இரவு 8.15 மணியளவில், அப்பகுதியில் துறைமுகம் சாலையில் உள்ள பல்க் அருகே நடந்து சென்று சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது வேகமாக வந்த தண்ணீர் லாரி இவர் மீது மோதியது. இதில், பலத்த காயம் அடைந்த விஜய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் ஆவேசம் அடைந்த அப்பகுதி மக்கள் லாரியை சிறைபிடித்து, லாரி கண்ணாடியை உடைத்தனர். மேலும், டிரைவரை தாக்கி, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த முத்தையாபுரம் போலீசார் லாரி டிரைவரை கைது செய்தனர். மேலும், விபத்தில் உயிரிழந்த விஜய் உடலை பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனை்ககு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக முத்தையாபுரம் போலீசார் வழ்ககுப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsJohnson's Engineers


Friends Track CALL TAXI & CAB (P) LTD


crescentopticals
Thoothukudi Business Directory