» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குடிதண்ணீர் தட்டுபாடு நீங்க தாசில்தார் நடவடிக்கை : லாரிகள், மோட்டார்கள் பறிமுதல்

சனி 12, ஆகஸ்ட் 2017 8:29:05 PM (IST)

துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலூகாவில் குடிதண்ணீர் தட்டுபாட்டை போக்க தாசில்தார் அதிரடி நடவடிக்கை எடுத்தார். இதில் ஆறு லாரி மற்றும் பதினெட்டு இறைப்பு மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டது

தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வற்றிய காரணத்தினால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில்  கடும் குடிதண்ணீர் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். எனவே ஏரல்,முக்காணி பகுதியில் பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என போராட்டம் நடத்தி வந்தனர். இதற்கிடையில் வல்லநாடு, கருங்குளம் பகுதியில் நிலத்தடி நீரை லாரி மூலம் எடுத்து வருவதை கண்டித்து பொதுமக்கள் போரட்டம் நடத்தி வந்தனர். இதனால் மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ். ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ் பயஸ்அருள் தலைமையில் குழு ஒன்றை அமைத்தனர். 

இந்த குழு  வல்லநாடு பகுதியில் நிலத்தடி நீரை திருடி எடுத்துக் கொண்டிருந்த நான்கு லாரியை பிடித்து  புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தது. ஏரல் அருகே சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுத்துக்கொண்டிருந்த 2 லாரியை பறிமுதல் செய்தனர்.மேலும் தற்போது மக்களின் கோரிக்கையை ஏற்று குடிதண்ணீருக்காக தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர்முறையாக ஏரலை சென்று அடைவதற்கு ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து ஏரல் வரை தாமிரபரணி ஆற்றில் முறைகேடாக வைத்திருந்த  18 இறைப்பு மோட்டார் பறிமுதல் செய்யப் பட்டது.  இதனால் ஏரல் மற்றும் முக்காணி பகுதியில் குடிதண்ணீர் பிரச்சனை தீரும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads




New Shape Tailors

selvam aqua


Nalam Pasumaiyagam

Johnson's Engineers

Universal Tiles Bazar




Thoothukudi Business Directory