» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விவசாயிகள் போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பு : அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு

சனி 12, ஆகஸ்ட் 2017 7:42:12 PM (IST)




தூத்துக்குடியில் வரும் 16ம் தேதி நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் திரளாக பங்கேற்பது என வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ., தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இயற்கை நீர்வளப்பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 16ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித் துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டங்களில் திமுகவினரும் திரளாக கலந்து கொள்ளவேண்டுமென்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின்வேண்டுகோள் விடுத்துள்ளார். இப்போராட்டத்திற்கு பல்வேறு கட்சிகளும், ஆதரவு தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் தூத்துக்குடி வடக்கு மாட்டத்திலுள்ள திமுக உள்ளிட்ட அனைத்துகட்சிகளும் கலந்து கொள்வது தொடர்பாக ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ தலைமை வகித்தார். திமுக சார்பில் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்.டி.கணேசன், கோட்டுராஜா, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ராமர், மாவட்ட விவசாய தொழிலாளரணி அமைப்பாளர் இளையபெருமாள், மாவட்ட பொருளாளர் சுசீ.ரவீந்திரன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சந்தனம், வக்கீல் அணி துணை அமைப்பாளர் நாகராஜா ஆகியோரும், காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகர மாவட்ட தலைவர் முரளிதரன், வர்த்தக அணி அமைப்பாளர் டேவிட் பிரபாகரன், பாரகன் அந்தோணிமுத்து, கோபால், சேகர், பிரேம்குமார், இந்திய கம்யூனிஸ்ட்கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் அழகுமுத்துபாண்டியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் நல்லையா, மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், நிர்வாக குழு உறுப்பினர் மாடசாமி, மாநகர செயலாளர் ஞானசேகர், மாவட்ட பொருளாளர் பரமசிவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் சங்கரன், விவசாய சங்க செயலாளர் பெருமாள், விடுதலை சிறுத்தைகள் சார்பில் கணேசன், மகேந்திரன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் யூசுப், துணை செயலாளர் முகமது ஜான், பெருந்தலைவர் மக்கள்கட்சி மாவட்ட தலைவர் தர்மராஜ், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட தலைவர் முத்துக்குமார், மாவட்ட செயலாளர் நம்பிராஜ், செந்தில்அரசு, தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் கிதர்பிஸ்மி, மாவட்ட தலைவர் ரிச்சர்ட் தேவசகாயம், பெரியார் தி.க. சார்பில் முனியசாமி, ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் வில்சன், தென்மண்டல செயலாளர் மனோகர், கண்ணன், த.மு.மு.க.சார்பில் புகாரி, மனிதநேய மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் அப்துல்காதர், முகம்மதுஜான், எஸ்.டி.பி.ஐ. சார்பில் முகம்மதுதாஹீர், மைதீன்கனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் வரும் 16ம் தேதி காலை 10 மணிக்கு தூத்துக்குடி பாளைரோடு சிதம்பரநகர் பஸ்நிறுத்தம் அருகே விவசாயசங்கங்கள் சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தின் அனைத்துக்கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றிபெறச்செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

Universal Tiles Bazar


New Shape Tailors

Nalam Pasumaiyagam


Johnson's Engineers


Pop Up Here


selvam aqua


Black Forest Cakes



Thoothukudi Business Directory