» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பக்கிள் ஓடையில் விழுந்த கன்றுகுட்டியை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

சனி 12, ஆகஸ்ட் 2017 6:19:26 PM (IST)



தூத்துக்குடி பக்கிள் ஓடையில் விழுந்த கன்றுகுட்டியை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

தூத்துக்குடி, ஜெயராஜ் ரோட்டில் உள்ள சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனை அருகே உள்ள பக்கிள் ஓடையில் தாயுடன் வந்த கன்றுகுட்டி ஒன்று தவறி விழுந்து விட்டது. தன் குட்டி பக்கிள் ஓடையில் விழுந்ததை பார்த்து செய்வதறியாமல் தாய்ப்பசு கண்கலங்கி நின்றது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் தூத்துக்குடி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த நிலைய அதிகாரி (பொறுப்பு) பத்மசேகர் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். தீயணைப்பு வீரர் ஜோசப் தங்கஆனந்த் பக்கிள் ஓடையில் இறங்கி கன்றுக்குட்டியை மீட்க கன்றின் வயிற்றில் மேலே தூக்குவதற்காக கயிறை கட்டினார். தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து கன்றுக்குட்டியை அலேக்காக மேலே தூக்கி க‌ரையில் சேர்த்தனர்.

காணாமல் போன குழந்தை தாயை பார்த்து ஓடுவது போல் கன்றுக்குட்டி தாய்ப்பசுவை நோக்கி சென்றடைந்தது. இதனை வேடிக்கை பார்த்த மக்கள் கரகோசங்கள் எழுப்பி வரவேற்றனர். கன்றுக்குட்டியை பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு பொதுமக்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Universal Tiles Bazar

CSC Computer Education

Johnson's Engineers

Nalam Pasumaiyagam




selvam aqua

New Shape Tailors





Thoothukudi Business Directory