» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரயில் மோதி இளம்பெண் சாவு: தற்கொலையா? போலீஸ் விசாரணை

சனி 12, ஆகஸ்ட் 2017 11:54:40 AM (IST)

கோவில்பட்டியில் ரயில் மோதி இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். தண்டவாளத்தில் கிடந்த உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, காந்திநகர் நகராட்சி பள்ளி அருகே தண்டவாளத்தில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் முகம் சிதைந்த நிலையில் கிடப்பதாக தூத்துக்குடி ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணின் உடலை மீட்டு பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

சுமார் 35 வயது மதிக்கத்தக்க அந்த பெண் நீல நிற சேலை அணிந்திருந்தார். ரயில் மோதியதில் முகம் முழுவதும் சிதைந்து காணப்பட்டது. இன்று அதிகாலை நெல்லை - மயிலாடுதுறை பயணிகள் ரயிலில் மோதி அவர் உயிரிழந்துள்ளார். அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவநில்லை. அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி உயிரிழந்தாரா? என ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


New Shape Tailors



Friends Track CALL TAXI & CAB (P) LTD



Johnson's Engineers




crescentopticals



Thoothukudi Business Directory