» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கோயில் ஆவணி திருவிழா துவக்கம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சனி 12, ஆகஸ்ட் 2017 9:16:50 AM (IST)



திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ‘வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா’ என பக்தி கோஷம் முழங்க ஆவணி திருவிழா கொடியேற்றம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் நடக்கும் முக்கிய விழாக்களில் ஒன்றான ஆவணி திருவிழா இன்று(12ம் தேதி) அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையட்டி அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்பட்டு, அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடந்தது. அதிகாலை 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், அதனை தொடர்ந்து தீபாராதனை நடந்தது. அதிகாலை 3 மணிக்கு வெள்ளி பல்லக்கில் கொடிபட்ட வீதி உலா வந்து கோயிலை சேர்ந்தது. அதிகாலை 5 மணிக்கு கோயில் இரண்டாவது பிரகாரத்தில் கொடியேற்றும் வைபவம் நடந்தது. 

கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மேளதாளங்கள், பஞ்சவாத்தியங்கள் முழங்க, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என பக்திகோஷம் விண்ணத்திர அதிகாலை 5.15 மணிக்கு சண்முசுந்தர சிவச்சாரியார் கொடியேற்றினார். பின்னர் கொடிமரத்திற்கு 16 வகையான அபிஷேகம் நடந்தது. பின்னர் கொடிமரத்தை தர்பபைபுல், வண்ணமலர்களால் கொடிமரம் அலங்கரிக்கப்பட்டது. காலை 6.20 மணிக்கு கொடிமரத்திற்கு மகாதீபாராதனை நடந்தது. தொடர்ந்து தேவாரம், திருப்புகழ், வேதபாராயணம் முழங்கியது. பின்பு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் தமிழக செய்தி விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர்(பொறுப்பு) பரஞ்ஜோதி, உதவி ஆணையர் அருணாச்சலம், திருவாவடுதுறை காஞ்சிபுரம் சுந்தரமூர்த்தி தம்பிரான், கோயில் உள்துறை கண்காணிப்பாளர்கள் பத்மநாபபிள்ளை, ராஜ்மோகன், உள்துறை மேலாளர் அய்யாபிள்ளை, மணியம் ரமேஷ், கோயில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷீஜாராணி, சப் இன்ஸ்பெக்டர்கள் ராஜகுமாரி, பாண்டியன், ஏரல் சேர்மன் கோயில் நிர்வாகம் சார்பில் அருணாச்சலம், கோயில் பணியாளர்கள் வள்ளிநாயகம், சிவசுப்பிரமணியன், பிச்சை உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 



இத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான வரும் 21ம் தேதி 10ம் திருவிழா அன்று தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 23ம் தேதி 12ம் திருவிழாவின்று சுவாமி, அம்மனுக்கு மஞ்சள் நீராட்டுக்கு பின்னர் வீதி உலா நடக்கிறது. இத்திருவிழா வரும் 23ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.  விழா நாட்களில் கோயில் கலையரங்கில் பக்திசொற்பொழிவுகள், பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் (பொறுப்பு) பரஞ்ஜோதி ஆகியோர் செய்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads




New Shape Tailors

Nalam Pasumaiyagam


CSC Computer Education


selvam aqua

Johnson's Engineers

Universal Tiles Bazar



Thoothukudi Business Directory