» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பாட்டி இறுதி ஊர்வலத்தில் வாலிபர் வெட்டிக் கொலை : 5பேர் கும்பல் வெறிச்செயல்

வெள்ளி 11, ஆகஸ்ட் 2017 10:00:48 PM (IST)

கயத்தாறு அருகே பாட்டியின் இறுதி ஊர்வலத்தில் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தாெடர்பாக அண்ணன்-தம்பிகள் உட்பட 5பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள அய்யனாரூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம். விவசாயி. இவருடைய மனைவி நெல்லை வடிவு. இவர்களுக்கு அண்ணாமலை, சந்தனம் (31) ஆகிய 2 மகன்களும், 6 மகள்களும் உள்ளனர். சந்தனம் கூலி வேலை செய்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் முருகய்யா. இவரும், நெல்லை வடிவும் அண்ணன்– தங்கை ஆவர். பரமசிவத்தின் மகளை, முருகய்யாவின் மகன் சீனிபாண்டி திருமணம் செய்ய மறுத்து விட்டார். 

இதனால் ஆத்திரம் அடைந்த அண்ணாமலை கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சீனிபாண்டியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். இவ்வழக்கில் அண்ணாமலை சிறையில் உள்ளார். இதனால் இரு குடும்பத்தினருக்கு இடையே முன்விரோதம் இருந்தது. சீனிபாண்டியின் கொலைக்கு பழிக்குப்பழியாக, பரமசிவத்தின் குடும்பத்தில் ஒருவரை கொலை செய்ய வேண்டும் என்று முருகய்யாவின் மகன்கள் தக்க தருணத்தை எதிர்பார்த்து இருந்தனர். இந்நிலையில் முருகய்யாவின் தாயாரான சுமார் 120 வயதுடைய சொக்கம்மாள் நேற்று இறந்து விட்டார். அவரது இறுதிச்சடங்கு இன்று மாலையில் நடந்தது.

சொக்கம்மாளின் உடலை ஊர்வலமாக எடுத்து சென்று, அங்குள்ள மயானத்தில் தகனம் செய்தனர். இறுதி ஊர்வலத்தில் சந்தனம் கலந்து கொண்டார். அவர் மயானம் வரையிலும் சென்றார். சொக்கம்மாளின் உடலுக்கு தீ வைத்த சில வினாடிகளில் முருகய்யாவின் மகன்களான கண்ணன், குமார், செல்வராஜ் உள்ளிட்ட உட்பட 5பேர் சேர்ந்து  சந்தனத்தை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டியும், கத்தியால் குத்தியும் கொலை செய்தனர். இதனால் இறுதிச்சடங்குக்கு வந்தவர்கள் அலறியடித்து ஓடினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், கயத்தாறு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 

கொலை செய்யப்பட்ட சந்தனத்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்ணன், குமார், செல்வராஜ் ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக தலைமறைவான மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட சந்தனத்தின் உடலைப் பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைப்பதாக இருந்தது. பாட்டியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட பேரனை தாய்மாமன் மகன்கள் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Johnson's Engineers

New Shape Tailors


selvam aqua


CSC Computer Education



Universal Tiles Bazar

Black Forest Cakes


Nalam Pasumaiyagam

Pop Up Here



Thoothukudi Business Directory