» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆளும் கட்சியில் பங்காளி சண்டை நடக்கிறது : கடையநல்லூர் எம்.எல்.ஏ. பேச்சு

வெள்ளி 11, ஆகஸ்ட் 2017 7:55:27 PM (IST)

தமிழகத்தில் ஆளும் கட்சியில் நடப்பது அதிகார போட்டியும், பங்காளி சண்டையும் நடக்கிறது முஹம்மது அபூபக்கர் எம்.எல்.எ. கூறினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுசெயலாளரும், கடையநல்லூர் எம்.எல்.எ.வுமான முஹம்மது அபூபக்கர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் ஆளும் பா.ஜ.க., அரசு கடந்த 3 ஆண்டுகளாக சிறுப்பான்மை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக நிலைப்பாடு எடுத்துள்ளது. இதற்காக இரண்டு மாதத்திற்கு ஒரு தடாலடி அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை முதல் பல்வேறு புதுபுது அறிவிப்புகளை வெளியிடுகிறது. இதனால் பொதுமக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. இதனால் சிறுப்பான்மை மற்றும் தாழ்த்தப்பட்டு மக்களுக்கு அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக மாட்டுகறி விஷயத்தில் மாட்டுகறி சாப்பிட்டதாகவும், விற்பனை செய்ததாகவும் 34 முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் யாரும் மாட்டுகறி சாப்பிடவுமில்லை, விற்பனை செய்யவில்லை. பொது சிவில் சட்டம், காஷ்மீருக்கு தனி அந்தஸ்து ரத்து போன்ற அறிவிப்புகள் இந்திய அரசியல் சாசன உரிமைகளுக்கு எதிரானது. பா.ஜ.க.,அரசின் இந்த சிறுப்பான்மை மக்களுக்கு எதிரான நடவடிக்கையை கண்டிக்கும் வகையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நாடு முழுவதும் 200 இடங்களிலும், தமிழகத்தில் 25 இடங்களிலும் விழிப்புணர்வு பிரச்சார கூட்டங்கள் நடத்தப்படும். இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் உள்ள இளைஞர் யூனியன் லீக், மகளிரணி, சுதந்திர தொழிலாளர் அணி, மாணவர் அமைப்பும் இணைந்து விழிப்புணர்வு பிரச்சார கூட்டங்களில் கலந்து கொள்வார்கள்.

பா.ஜ.க., அரசு குதிரை பேர அரசியல் குஜராத்தில் நடந்த ராஜ்ய சபா தேர்தலில் மூலம் தெரியவந்தது. மேலும் அத்தேர்தலில் பா.ஜக..,தோல்வியும் அடைந்தது. இந்தியாவில் தாங்கள் மட்டுமே ஆளு வேண்டும் அல்லது தாங்கள் சொல்வதை கேட்கும் அரசுகள் மட்டும் தான் ஆளு வேண்டும் என பா.ஜ.க., அரசியல் இருக்கிறது.

தமிழகத்தில் மாநில உரிமைகளும் பறிக்கப்படுகிறது. தமிழகத்தில் ஆளும் அரசும் மூன்று, நான்கு அணிகளாக பிரிந்து மத்திய அரசிடம் மண்டியிட்டு கிடக்கின்றன. நெடுவாசல் முதல் ஜல்லிகட்டு வரை மிகப்பெரிய போராட்டம் நடத்தியும் மத்திய அரசு கண்டுகொள்வதாக இல்லை. தமிழகத்தில் எதிர்கட்சி தலைவராக உள்ள தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் பிரதான எதிர்கட்சிகள் மட்டுமே மத்திய அரசுக்கு கண்டித்து குரல் கொடுத்து வருகின்றன.

தமிழகத்தில் வரும் 16ம் தேதி நடக்கும் விவசாயிகள் போராட்டத்தில் தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த போராட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கலந்து கொள்ளும். சிறுப்பான்மை மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மாநிலம் முழுவதும் மாநாடு நடத்த உள்ளோம். இதில் முதற்கட்டமாக தூத்துக்குடி மாவட்ட மாநாடு காயல்பட்டினத்தில் செப்டம்பர் முதல்வாரத்தில் நடத்தப்படும். இம்மாநாட்டில் எதிர்கட்சியில் உள்ள கூட்டணி தலைவர்களை பங்கேற்க அழைப்பு விடுப்போம்.

தமிழகத்தில் ஆளும் கட்சியில் நடப்பது அதிகார போட்டி. பங்காளி சண்டை. தமிழகத்தில் ஆளும் கட்சியில் நிலவும் குழப்பத்திற்கு பா.ஜ.க., தான் காரணம். 
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கூம்பு வடிவ குழாயை பயன்படுத்த கூடாது என போலீசார் கூறுகின்றனர். நெல்லையில் நடந்த முஸ்லிம்கள் உலமாக்கள் கூட்டத்தில் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். குறிப்பாக முஸ்லிம்கள் மக்கள் வசிக்க கூடிய பகுதியில் வாங்கு சொல்வதற்காக மட்டும் கூம்பு வடிவ குழாயை அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட செயலாளர் முஹம்மது ஹசன், மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஷ்ஹப், நகர தலைவர் அசன், நகர செயலாளர் அபுசாலிஹ், மாவட்ட துணை செயலாளர் அப்துல் வாஹித் ஆகியோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து

சாமிAug 12, 2017 - 09:43:29 AM | Posted IP 117.2*****

அதனால உனக்கு என்ன தம்பி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

selvam aqua

Universal Tiles Bazar



Nalam Pasumaiyagam

Pop Up Here

New Shape Tailors

Black Forest Cakes



CSC Computer Education

Johnson's Engineers




Thoothukudi Business Directory