» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கல்லூரி மாணவியை கடத்தி திருமணம்: வாலிபர் கைது

வெள்ளி 11, ஆகஸ்ட் 2017 12:44:07 PM (IST)

தூத்துக்குடியில் கல்லூரி மாணவியை கடத்தி திருமணம் செய்ததாக வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மலர் (17). இவர் தூத்துக்குடி பீச் ரோட்டில் உள்ள கல்லூரியில் பிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 5ம் தேதி மாதா கோவில் திருவிழாவுக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் இல்லை. 

இதையடுத்து அவரது தந்தை தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மலர், வாகைகுளத்தைச் சேர்ந்த கடற்கரையாண்டி மகன் ரமேஷ் (21) என்பவரை காதலித்து வந்ததாகவும், இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் தெரியவந்தது. இதையடுத்து திருச்செந்தூர் விடுதியில் தங்கியிருந்த இருவரையும் போலீசார் மீட்டனர். மைனர் பெண்ணை கடத்தியதாக ரமேஷை போலீசார் கைது செய்தனர். இளம்பெண்ணை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Johnson's Engineers

Universal Tiles Bazar



CSC Computer Education

selvam aqua


New Shape Tailors

Nalam Pasumaiyagam





Thoothukudi Business Directory