» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தனியார் வங்கியால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி : தூத்துக்குடியில் வாகன ஓட்டிகள் அவதி..!!

வெள்ளி 11, ஆகஸ்ட் 2017 10:59:04 AM (IST)



தூத்துக்குடியில் தனியார் வங்கியான ஹெச்டிஎப்சி வங்கியின் முன்பாக ஸ்டால் அமைக்கப்பட்டுள்ளதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்ப்ப டுகிறது. 

தூத்துக்குடி வடக்கு ரதவீதியில் இயங்கி வரும் ஹெச்டிஎப்சி வங்கியில், கார் லோன் விளம்பரத்திற்காக வங்கியின் முன்பாக ஸ்டால் அமைக்கப்பட்டு, அங்கு கார் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. வாகன நிறுத்தம் பகுதியின் பெரும்பகுதியை இது ஆக்கிரமித்துள்ளதால் வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு இரண்டு வரிசைகளாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. 

இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித்தவிக்கின்றன. ஏற்கனவே குறுகலான சாலையான இப்பகுதியில் தனியார் வங்கியின் விளம்பர ஸ்டால், மேலும் வாகன நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. சிலநேரங்களில் அங்கு போக்குவரத்து ஸ்தம்பித்து நிற்கிறது. இதுகுறித்து போக்குவரத்து காவல் துறையினர் மற்றும் சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Nalam Pasumaiyagam




Universal Tiles Bazar

selvam aqua


CSC Computer Education

New Shape Tailors

Johnson's Engineers




Thoothukudi Business Directory