» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விவிடி நிறுவனத்திடம் ரூ.2.5 கோடி நஷ்ட ஈடு கோரி காஜல் அகர்வால் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

புதன் 9, ஆகஸ்ட் 2017 12:14:46 PM (IST)

விவிடி நிறுவனத்திடம் ரூ.2.5 கோடி நஷ்ட ஈடு கோரி  காஜல் அகர்வால் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

நடிகை காஜல் அகர்வால், விவிடி தேங்காய் எண்ணெய் நிறுவன விளம்பரத்தில் 2008-ம் ஆண்டு நடித்தார். இந்த விளம்பரம் தொடர்ந்து ஒளிபரப்பானதால் அந்நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தார் காஜல் அகர்வால். சென்னை உயர் நீதிமன்றத்தில் அளித்த மனுவில், நான் நடித்த விளம்பரத்தை ஒருவருடம் மட்டுமே ஒளிபரப்பவேண்டும். 

ஆனால் ஒரு வருட ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து ஒளிபரப்புகிறார்கள். இதனால் தனக்கு ரூ. 2.5 கோடி நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்று கோரியிருந்தார். ஆனால் விவிடி நிறுவனத்தின் தரப்பில், அதுபோன்ற ஒப்பந்தம் எதுவும் எழுதப்படவில்லை. எனவே அந்த விளம்பரத்தை 60 வருடங்களுக்கு ஒளிபரப்ப உரிமை உள்ளது என்று கூறப்பட்டது. இதையடுத்து காஜல் அகர்வாலின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் வழக்குக்கான செலவை விவிடி நிறுவனத்துக்குச் செலுத்தவும் காஜல் அகர்வாலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

உண்மைAug 10, 2017 - 11:28:41 AM | Posted IP 59.99*****

அந்த வீர டுமிழச்சியை (ஜுலி) வெட்கமே இல்லாமல் தலையில் தூக்கி வைத்து கொண்டாடியவர்களுக்கு செருப்படி! மானம்கெட்டவளுக்கு பெயர் வீர டுமிழச்சி?

பொதுAug 10, 2017 - 11:10:59 AM | Posted IP 171.4*****

சூப்பர் கருத்து உண்மை அவர்களே

ஒருவன்Aug 9, 2017 - 06:23:48 PM | Posted IP 117.2*****

உண்மை அவர்களுக்கு , கூத்தாடிகள் எல்லா மொழியிலும் , எல்லா மதத்திலும், எல்லா நாட்டிலும் , உன் பக்கத்திலும் இருக்கான்.. ஆமா நீங்க பிக் பாஸ் பார்த்துட்டே நாக்கை தொங்கிட்டு இருங்க....

உண்மைAug 9, 2017 - 05:50:11 PM | Posted IP 59.99*****

தமிழ்நாட்டில் கூத்தாடிகள் கூத்தாடி பிழைக்கவில்லையா? வெள்ளித்திரை முதல் சின்னத்திரை வரை? எடுத்துக்காட்டு "வீர டுமிழச்சி" ஜோலி மன்னிக்கவும் ஜுலி!

ஒருவன்Aug 9, 2017 - 03:17:25 PM | Posted IP 59.96*****

பணத்துக்காக மட்டும் எதையும் செய்யும் வடை நாட்டு கூத்தாடி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Pop Up Here

Nalam Pasumaiyagam

Johnson's Engineers


New Shape Tailors

CSC Computer Education




Black Forest Cakes

selvam aqua

Universal Tiles Bazar



Thoothukudi Business Directory