» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை ? : துாத்துக்குடியில் பயங்கரம்

திங்கள் 31, ஜூலை 2017 8:46:58 PM (IST)

துாத்துக்குடி தனசேகரன் நகரில் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

துாத்துக்குடி தனசேகரன் நகரில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக சிப்காட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.உடனே போலீசார் அங்கு சென்று பார்த்த போது இறந்து கிடந்தவர் பெயர் தர்மராஜ் (42) என்றும் திரவியபுரம் 4வது தெருவினை சேர்ந்தவர் என முதல்கட்டவிசாரணையில் தெரியவந்துள்ளது. 

இக்கொலை தொடா்பாக திரவியபுரம் 4வது தெருவினை சேர்ந்த செல்லப் பாண்டியன் மகன் ஜான்சன் (53) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கள்ளக்காதல் விவகாரத்தில் அவர் கொலை செய்யப் பட்டிருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. தொடர்ந்து இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து

raamarAug 1, 2017 - 04:18:33 PM | Posted IP 171.4*****

கள்ளக்காதல் என்பது தவறு கஞ்சா வியாபார போட்டி தயவு செய்து காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்கவும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Johnson's Engineers

New Shape Tailors


Friends Track CALL TAXI & CAB (P) LTD





crescentopticals






Thoothukudi Business Directory