» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தேவாலயத்தில் தங்கநகை, ஹார்ட் டிஸ்க் திருட்டு : மர்மநபருக்கு போலீஸ் வலை

வெள்ளி 19, மே 2017 8:05:57 PM (IST)

சாத்தான்குளம் அருகே தேவாலயத்தில் புகுந்து 4 பவுன் தங்க நகை மற்றும் கண்காணிப்பு கேமரா ஹார்ட் டிஸ்க்கையும் திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சாத்தான்குளம் அருகே உள்ள மணிநகர் புதூரில் சொக்கன் குடியிருப்பு பங்குக்குட்பட்ட புனித சந்தனமாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் காலையும், மாலையும் ஜெப ஆராதனைகள் நடக்கும். இதனால் காலையில் ஆலயகதவை திறந்து மாலையில் மூடுவது வழக்கம். 

இந்த ஆலயத்தில் கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஆலய கதவு திறந்து கிடப்பதை அறிந்து வந்த மர்ம நபர் ஆலயத்தின் உள்ளே புகுந்து அங்குள்ள மாதா சொரூபத்தில் கண்ணாடி பேழையை கழற்றி மாதா  கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்கநகையை எடுத்துக்கொண்டு , கண்காணிப்பு கேமராவில் தனது உருவம் பதிவானதை அறிந்த திருடன் அதில் உள்ள ஹார்ட்டிஸ்க்கையும் திருடிக்கொண்டு தலை மறைவாகி விட்டான். மாலை ஆலயத்துக்கு வந்த உபதேசியார் அந்தோணி ராஜ் (46) மாதா சொரூபத்தில் நகை திருட்டு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.உடன் தட்டார்மடம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் தட்டார்மடம் சப். இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குபதிந்து தலைமறைவான மர்ம நபரை தேடி வருகிறார்.   


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

New Shape Tailors

selvam aqua

Universal Tiles Bazar


CSC Computer Education


Nalam Pasumaiyagam

Sterlite Industries (I) Ltd


Johnson's Engineers




Thoothukudi Business Directory