» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பஸ் நிலையம் பின்பகுதியில் உள்ள பாதையை திறக்க கோரி நகராட்சி கோவில்பட்டி அலுவலகம் முற்றுகை

வெள்ளி 19, மே 2017 3:37:31 PM (IST)



கோவில்பட்டி பஸ் நிலையம் பின்பகுதியில் உள்ள பாதையை திறக்க கோரி நகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் பின்பகுதியில் மக்கள் செல்வதற்கான நடைபாதை இருந்தது. இதனை மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் அண்ணாபஸ் நிலையம் புதுப்பிக்கபட்ட போது அந்த நடைபாதை அடைக்கப்பட்டு சுற்றுசுவர் எழுப்பபட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பின்பாதையை பயன்படுத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

எனவே மீண்டும் பின்பக்கத்தில் நடைபாதை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூசி மாவட்ட பொது செயலாளர் தமிழரசன் மற்றும் 5வது தூண் அமைப்பினர் தலைவர் சங்கரலிங்கம் தலைமையில் நகராட்சி அலுவலகத்தினை முற்றுயிட்டனர். கிழக்கு காவல்நிலைய ஆய்வாளர் பவுல்ராஜா தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நகராட்சி எதிர்ப்புறம் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph Marketing


crescentopticals



Thoothukudi Business Directory