» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆட்சியர் அனுமதியின்றி சர்ச் கட்டுவதற்கு எதிர்ப்பு : கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுக்கை

வெள்ளி 19, மே 2017 3:28:53 PM (IST)



ஓட்டப்பிடாரம் அருகே சர்ச்  கட்ட எதிர்ப்பு தெரிவித்து பஜ்ரங்தள் மற்றும் பாரதிய கிசான் சங்கத்தினர் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம் கொல்லங்கிணறு பகுதியில் மாவட்ட ஆட்சியர் அனுமதியில்லமால் சிலர் சர்ச் கட்டி வருவதாகவும், அப்பகுதியில் அதிகளவு இந்து மக்கள் வசித்து வருவதால் மோதல் ஏற்படும் எனவும் சர்ச் கட்டுமானப்  பணிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பஜ்ரங்தள் மற்றும் பாரதிய கிசான் சங்கத்தினர் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பஜ்ரங்தள் மாநில அமைப்பாளர் சரவணகார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 30க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலிறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மேலும் தங்கள் கோரிக்கை அடங்கிய மனுவினை கோட்டாட்சியர் அலுவலகத்தில் அளித்தனர்.


மக்கள் கருத்து

படிப்பாளிமே 20, 2017 - 09:27:13 PM | Posted IP 103.5*****

ஆங்கிலேயர்கள் நமக்கு கல்வி , அறிவு , .. எல்லாம் நமக்கு விட்டு கொடுத்துட்டு போய்ட்டாங்க , மதவாதிகளுக்கு புத்தி வராது ...

சுடலைமே 20, 2017 - 01:26:14 PM | Posted IP 125.1*****

ஒலிபெருக்கி பயன் படுத்தாதவரை ஒன்றும் பாதகமில்லை

தமிழன்மே 20, 2017 - 12:31:54 PM | Posted IP 182.7*****

ஹிந்து இசுலாம் கிறிஸ்தவம் வொற்றுமையாய் இருக்குறத புடிக்காதவானுக ..

MANIமே 19, 2017 - 05:25:47 PM | Posted IP 115.2*****

ரோடு சைடு இருக்கும் இந்து கோவில்கள் ஆட்சியர் அனுமதியுடனா கட்டிருக்காங்க? பொறாமை

Manithanமே 19, 2017 - 05:22:09 PM | Posted IP 115.2*****

எத்தனையோ இந்து கோவில்கள் ரோடு சைடு நிறைய இருக்கு . அதுக்கெல்லாம் கலிக்டெர் ஆஃப்ரொவள் வாங்கிய கேட்டீங்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


New Shape Tailors

CSC Computer Education


Nalam Pasumaiyagam

selvam aqua


Johnson's Engineers

Sterlite Industries (I) Ltd

Universal Tiles Bazar




Thoothukudi Business Directory