» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காட்சிப்பொருளான அரசு இ‍-சேவை மையங்கள் : பொதுமக்கள் அவதி

வெள்ளி 19, மே 2017 1:26:29 PM (IST)



துாத்துக்குடியில் அரசு இ- சேவை மையங்களில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர்.

அரசு அலுவலகங்களுக்கு சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக பொதுமக்கள் வருகின்றனர். இவர்களின் தேவைக்காக அரசு சார்பில் இ- சேவை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. துாத்துக்குடியில்  தாலுகா அலுவலகம் முன்பு, சிதம்பரநகர், பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு என நகரின் பல முக்கியமான இடங்களில் செயல்பட்டு வருகின்றன.இதில் ஒரு சில அரசு இ- சேவை மையங்களில் தங்களின் பல்வேறு தேவைகளுக்காக செல்லும் பொதுமக்கள் பல சிரமங்களை சந்திப்பதாக கூறப்படுகிறது.  இதில் அந்த மையங்களில் அடிக்கடி மின்சாரம் இல்லை, இணையதள இணைப்பு இல்லை என்று கூறி அலைக் கழிக்கப்படுகின்றனர். 

அப்படியே இரண்டும் இருந்தாலும் பணியாளர்கள் இருப்பதில்லை. இதனால் பல மணி நேரம் காத்திருந்து நேர விரயம் ஆகிறது என்றும் அலுவலகங்களுக்கு விடுப்பு, அனுமதி எடுத்து விட்டு வருவதும் வீணாகி விடுவதாக வேலைக்கு செல்பவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே இப் பிரச்சனையை கூடிய விரைவில் சரி செய்ய வேண்டுமென துாத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாணவ மாணவிகளுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படுமா ?

இந்த இ சேவை மையங்கள் தமிழகஅரசு கணிணி நிறுவனமான எல்காட் சார்பில் நடத்தப்பட்டு வந்தது.இதில் வேலை செய்பவர்களுக்கு கடந்த 7 மாதமாக சம்பளம் வழங்கவில்லை என தெரிகிறது. மேலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இப்பணிகள் எல்காட்டிடமிருந்து அரசு கேபிள் சேவை மையம் வசம் சென்றது குறிப்பிடத்தக்கது. தற்போது பிளஸ் 2, மற்றும் 10 ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதையொட்டி மேற்படிப்புக்காக சாதி சான்றிதழ், வருமானசான்றிதழ், கல்லுாரிகளில் சேர முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் உள்ளிட்ட அனைத்திற்கும் இ சேவை மையத்திற்கு தான் செல்ல வேண்டும். 

துாத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மக்கள் பிரச்சனைகளுக்காக பல்வேறு முகாம்கள் நடத்தி வருகிறார்.எனவே மாணவ மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு இதற்கென அரசு சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்தலாம் என துாத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து

குலாம், ஹவுசிங்போர்டு 3 வது வார்டுமே 19, 2017 - 02:09:30 PM | Posted IP 122.1*****

உண்மை, இங்கு சிதம்பரநகர் பொது சேவை மையத்தில் உணவு நேரம் 2 மணி முதல் 3 மணி என்று எழுதியுள்ளனர் ஆனால் காலையில் 10 .40 வரை ஊழியர்கள் வருவதில்லை மதியம் 1 மணிக்கு அடைத்து 3 .30 வரை திறப்பதில்லை, சரி 11 மணிக்கு சென்றால் சர்வர் வேலை செய்வதில்லை RTE க்காக சாதி சான்றிதல், வருமானசான்றிதல் எடுக்கமுடியாமல் ,மக்கள் பலரும் திண்டாடிவருகின்றனர் , இனி திறந்தால் என்ன திறக்கவில்லை என்றால் என்ன RTE LAST தேதி முடிந்துவிட்டது வாழ்க மாவட்ட நிர்வாகம் வாழ்க DIGITAL INDIA

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads



New Shape Tailors

Johnson's Engineers

Nalam Pasumaiyagam




Panchai Dairy

selvam aqua

Black Forest Cakes

CSC Computer Education





Thoothukudi Business Directory