» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரவுடி கொலையில் பில்லா ஜெகன் உட்பட 6பேர் கைது : பரபரப்பு வாக்குமூலம்

வெள்ளி 19, மே 2017 11:54:09 AM (IST)

துாத்துக்குடியில் பிரபல ரவுடியை கொலை செய்ததாக தேடப்பட்ட வழக்கில் துாத்துக்குடி விஜய் ரசிகர்மன்ற தலைவர் பில்லாஜெகன் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

துாத்துக்குடி மட்டக்கடை பஜார் காளியப்பபிள்ளை தெருவை சேர்ந்தவர் பில்லாஜெகன் (46). இவர் துாத்துக்குடி மாவட்ட விஜய் ரசிகர்மன்ற தலைவராக உள்ளார். இவரது மகள் நெல்லையில் உள்ள ஒரு கல்லுாரியில் படித்து வருகிறார். பில்லாஜெகன் மகளுக்கு அதே தெருவை சேர்ந்த பிரபல ரவுடியான சச்சின் (26) என்பவர் ஒருதலையாகக் காதலித்து, தொல்லை கொடுத்து வந்ததாகவும் இதனை பில்லாஜெகன் கண்டித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சச்சினை பில்லாஜெகன் உட்பட 8 பேர் சேர்ந்து காரில் கடத்திச் சென்று கொடூரமாக கொலை செய்ததாக துாத்துக்குடி வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப் பதிவு செய்து இக்கொலையில் தொடர்புடைய 8 பேரை தேடி வந்தநிலையில் நேற்று இவ்வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று காலை இவ்வழக்கில் தொடர்புடைய துாத்துக்குடி செயின்ட் பீட்டர் கோவில் தெருவை சேர்ந்த ஜேசு மகன் பில்லாஜெகன் (46) , அவரது தம்பி சீமான் (35), சின்னமணி நகரை பாஸ்கர் மகன் திருச்சிற்றம்பலம் (30), எஸ்எம் புரத்தை சேர்ந்த டேவிட் அந்தோணி மகன் பாலா (28), லெவிஞ்சிபுரம் முத்துச்செல்வம் மகன் வின்னர் கார்த்தி (28), மகிழ்ச்சிபுரம் சுடலைக்கண்ணு மகன் சின்னத்துரை (32) ஆகிய 6 பேரை செய்துள்ளனர்.

தொடர்ந்து போலீசாரிடம் பில்லாஜெகன் அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது, என் முதல் மனைவியின் மகள் நெல்லையில் உள்ள ஒரு கல்லுாரியில் படித்து வந்தார். இந்நிலையில் சச்சின் என்பவர் ஒரு தலைகாதலால் என் மகளுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதற்கு என் மகள் மறுக்கவே முகத்தில் ஆசிட் ஊற்றி விடுவேன் என மிரட்டியுள்ளார்.  இதுகுறித்து வடபாகம் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சச்சின் தன்னை மிரட்டியது குறித்து என்னிடம் கூறி எனது மகள் அழுதார்.இதனால் எனது மகள் வாழ்க்கையை சச்சின் சீரழித்து விடக்கூடாது என்று நினைத்த நான் அவரை காரில் கடத்தி சென்று கொலை செய்தேன் என கூறியுள்ளார்.


மக்கள் கருத்து

singamமே 23, 2017 - 03:03:55 PM | Posted IP 8.37.*****

ஆடுன ஆட்டம் எல்லாம் ஆண்டவன் மானுக்குல

....மே 21, 2017 - 09:07:20 PM | Posted IP 42.11*****

Hats off

பெர்னாண்டோமே 21, 2017 - 07:03:17 PM | Posted IP 157.5*****

இந்த கொலை ... ரொம்ப கொடூரம் ....

கேட்ச்மே 21, 2017 - 03:06:26 PM | Posted IP 82.19*****

26 வயது வாலிபரை 6 பேர் சேர்ந்து கொலை! மிகவும் கேவலம்.. அதுவும் பிரபலம் ஆனவர், திரைப்படங்கள் களின் பின் விளைவு, ரசிகர் மன்ற தலைவர், திரையில் வந்தால் தலைவருக்கு வாழ்த்து, தன் வாழ்வில் வந்தால் கொலை, புரிகிறதா மக்களே...

Manishமே 20, 2017 - 10:42:07 PM | Posted IP 43.25*****

Appa wat u did is Ritu Tia is the grt Nd correctly done

duraiமே 20, 2017 - 08:23:00 PM | Posted IP 168.2*****

Hi

தர்மம்மே 20, 2017 - 07:42:29 PM | Posted IP 157.5*****

இது உண்மையாக இருக்காது.பில்லா ஜெகன் நல்ல மனிதர்

நண்பர்மே 20, 2017 - 07:29:56 PM | Posted IP 27.62*****

அந்த சச்சின் எங்கிரவனோ நல்லவன் இல்லை அவன் போதை பெருள்களும் கடத்துரவன் மாணவர்களை

அண்ணன் தம்பிமே 20, 2017 - 06:44:46 PM | Posted IP 8.37.*****

என் வீட்டீல் பென்னை இப்படி செய்தால் நானும் இப்படிதான் செய்வேன்.., #பில்லா_ஜெகன் அவர் செய்தது தவறில்லை..

உன்னை போல் ஒருவன்மே 20, 2017 - 03:37:27 PM | Posted IP 61.2.*****

கடவுள் இருக்கன்டா குமாரு

நாலு வாய்மே 20, 2017 - 12:26:14 PM | Posted IP 157.5*****

ஒரு பிரச்சனைன்னா நாலு வாய் நாலு விதமா பேசும் . உண்மை அந்த கடவுளுக்குத்தான் தெரியும்

பெர்னத்மே 20, 2017 - 12:43:02 AM | Posted IP 157.5*****

ஒரு தாயாக பார்க்கும்பாேது பில்லா ஜெகன் அவர்கள் செய்ததில் எந்த தப்பும் இல்லையென்று எனக்கு தாேன்றுகிறது.சமூகத்தில் பெண்களுக்கு சம உரிமையும் தக்க மரியாதையும் கட்டாயம் கிடைக்க வேண்டும் என்பதர்க்கு இச்சம்பவம் மிகச்சிறந்த உதாரனம்.

உங்கள் நண்பர்மே 19, 2017 - 08:20:27 PM | Posted IP 27.62*****

பில்லா ஜகன் அவர்கள் மிகவும் நல்லவர் அந்த பக்கங்கள் பையனோ நல்லவன் இல்லை அவன் போதை பொருள்களை விற்பனை செய்து மாணவர்களை கெடுப்பவன் ஆவான் அவரை கொலை செய்தோ தவறு அல்ல கடவுளா இருந்தாலும் இதைதான் செய்திருப்பார்

ஒரு தாேழிமே 19, 2017 - 07:42:48 PM | Posted IP 157.5*****

பாதிக்க பட்டவள் என் தாேழிதான்....அவனால் என் தாேழி எந்த அலவுக்கு மனஉசை்சலுக்கு ஆளானாள் என்பது எனக்கு தெரியும்....அவனுக்கு கிதை்துள்ள தன்டனை மிகவும் சரியானது

ஒரு தந்தைமே 19, 2017 - 07:15:54 PM | Posted IP 157.5*****

என் மகழுக்கு தாெல்லை காெடுத்திருந்ததால் நானும் இதையே செய்திருப்ணே்.....பில்லா ஜெகன் செய்ததில் தவறு ஒன்றும் இல்லை

உங்கள் தாேழன்மே 19, 2017 - 07:03:41 PM | Posted IP 157.5*****

பெண்களுக்கு தாெல்லை குடுப்பவர்களுக்கு இது மிகச்சிறந்த பாடம்

Samooga sevaganமே 19, 2017 - 06:26:12 PM | Posted IP 157.5*****

Rowdy thanam pandra oru rowdy,bodhai porul kadathi maanavargalin vaalkaiyai seeralikum oru kirumiyai dhaan engal Annan billa jegan dhandithu ullaar..pira pengalai sagodhariyaai paarkaamal thappaana kannotathil paarkum Ella aangalukum Idhu oru paadamaaga irukatum....kolai seiyapata Sachin enbavaraal neradiyaaga baadhika pattavan naan...kaaval thuraiyaal seiya mudiyaadhadhai engal kaaval dheivam seidhulladhu...Annan billa jegan aal avala vaikapattavan naan...avar meedhu kurai solluvadhai ennaal yetru kolla mudiyaadhu...pala yelai maanavargaluku kalvi koduthavar...pala yelai kudumbangalai vaazha vaipavarai dheivam endrey alaika vendum...dheivam seivadhu dhandanai endrey koorapadum...kolai alla.!!

உண்மைமே 19, 2017 - 04:08:55 PM | Posted IP 27.62*****

உண்மை யை சொல்டா பொட்ட. 10பேர் சேர்ந்து அடிச்சு கொண்ணா வீரமா பொட்ட

தர்மம் வெல்லும்மே 19, 2017 - 04:05:24 PM | Posted IP 27.62*****

பில்லா ஜெகன் பற்றி அவர் தெருவில் விசாரித்து பாருங்கள். ரவுடி யார் என்று தெரியும். கொள்ள பெற்றிருக்கும் சஜின் ரவுடி அல்ல. அவர் மலேஷியா வில் வெள்டிங் பயிற்சி பெற்ற பட்டதாரி. இருவரும் காதலித்து வரும் பொது பில்லா ஜெகன், சஜினை அழைத்து அவர் நல்ல நிலைமைக்கு vanthavudan தன் பெண்ணை திருமணம் செய்து தருவதாக சத்தியம் செய்து கொடுத்துள்ளார். பில்லா ஜெகன் சொல்வைதை nambi சஜின் வெளிநாட்டிற்கு சென்றார். சிறு மாதங்கள் kalithu அந்த பெண் தன் அப்பா வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க போவதாகவும், தன்னை உடனே வந்து அழைத்து செல்லவும் சஜினிடம் அலை பேசியில் தொடர்பு கொண்டு கூறியுள்ளார். சஜின் தன்னிடம் பண வசதி இல்லாததால் பில்லா ஜெகனிடம் போட்டி போடா mudiyathu என்று கூறியுள்ளார். அந்த பெண் தன்னை அழைத்து செல்ல விட்டால் tharkolai செய்து kolvathaha சஜினிடம் கூறியுள்ளார். இதனை தடுக்கவே சஜின் வெளிநாட்டில் irunthu india thriumbinar. கொள்ள பெற்றிருக்கும் சஜின் நிரபராதி. அவர் மேல் oru thavarum illai. அரசியல் பலத்தையும் தன் மேல் அனைவர்க்கும் பயம் வர vendum என்பதற்காக நிறைவேற்றிய நாடகமே இது. இதற்கு போலீஸும் மீடியாவும் ஆதரவு...

நியாத்தை தேடும் ஒருவன்மே 19, 2017 - 03:46:25 PM | Posted IP 27.62*****

சகோதரர்களே, விஜய் ரசிகர் மன்ற தலைவர் என்று சொல்லி கொள்ளும் இவர் முதல் மனைவி உயிரோடு இருக்கும் போதே தன் தெருவில் வசிக்கும் மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். இதை கண்டித்த மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொன்றுவிட்டு இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இந்த செய்யிதில் சொல்லபற்றிருக்கும் பெண் முதல் மனைவிக்கு பிறந்தது.

ORUVANமே 19, 2017 - 03:23:16 PM | Posted IP 115.2*****

இவன் என்ன தண்டனை குடுக்க கடவுளா நீ எதை செய்தாயே அது உனக்குத்தான் திரும்பும்

நியாத்தை தேடும் ஒருவன்மே 19, 2017 - 01:34:38 PM | Posted IP 27.62*****

வீட்டுக்கு வீடு வைப்பாட்டி வைத்திருக்கும் இவன் நல்லவன்.வெறி பிடித்த அப்பாவிடம் இருந்து காப்பாத்த நினைத்தவன் ரவுடி... எவ்ளோ பணம் வாங்குனீங்க பா??????

உன்மை விரும்பிமே 19, 2017 - 01:34:32 PM | Posted IP 117.2*****

இந்த கொலை நடந்தது வேறு ஒன்றுக்கும் இல்லை இந்த பொம்பளை கிறுக்கன் குட்டம் அரசியலில் வளர்ச்சி அடைய தான் ஒழிய வேறு ஒரு காரணமும் இல்லை பயம் கட்ட தான் தன்னுடைய அரசியல் எதிரியை பயம் கட்ட தான் ஒழிய வேறு ஒன்றுக்கும் இல்லை.இவன் உடைய அரசியல் எதிரி யாரு என்று கொஞ்சம் பாருங்க எல்லாம் புரியும். இந்த கொலை ஏன் நடந்தது என்று. அதே மாதிர முதல் மாணவியின் நிலை என்ன ஆச்சு என்று கொஞ்சம் பாருங்க உயிருடன் தான் இருக்கல ?

உங்கள்தோழிமே 19, 2017 - 01:05:00 PM | Posted IP 27.62*****

ஆமள இல்லாத வீட்டுல போய் வீட்டு பொருட்களை அடித்து உடைத்து பெண்களை அடிப்பவனை ஆண் என்று கூறலாமா? அவரின் மகளின் வாக்குமூலம் பற்றி விரிவாக போடுங்கள் அப்போத தெரியம் யார் மீது தவறு இருக்கிறது என்று தெரியும் . இந்த கூட்டம் பணம் என்றால் பிணமும் வாய் பிலக்கும் அல்லவா அந்த கூடடத்தை சேர்ந்தவர்கள். பணம் பதவி இவற்றிக்காக எதையும் செய்ய துணிந்தவர்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdscrescentopticalsFriends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory