» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
முத்துநகர் எக்ஸ்பிரசில் ரூ.7.5 லட்சம் நகை கொள்ளை : ரயில்வே போலீஸ் விசாரணை
வெள்ளி 5, மே 2017 11:28:43 AM (IST)
சென்னையிலிருந்து துாத்துக்குடி வந்த முத்துநகர் எக்ஸ்பிரசில் 2 பயணிகளிடம் சுமார் 7½ லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை. பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதில் காஜா முகைதீன் தனது 3 பேக்குகளையும்,புஷ்பவள்ளி தனது இரண்டு பேக்குகளையும் சீட்டுக்கு அடியில் வைத்து விட்டு இரவு துாங்கியுள்ளனர். ரயில் திருச்சிக்கும் , திண்டுக்கல் அருகே உள்ள வடமதுரைக்கும் இடையே வந்து கொண்டிருந்த போது 5 பேக்குகளையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். ரயில் திண்டுக்கல் வரும் போது முழித்து பார்க்கும் போது தங்களது பேக்குகள் காணாமல் போனதை பார்த்து பதறிய இருவரும் ரயிலை நிறுத்தியுள்ளனர்.
தொடர்ந்து ரயிலில் பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசார் அவர்களிடம் சென்று விசாரித்த போது காஜாமுகைதீன் தனது 3 பேக்கில் 35 பவுன் தங்க நகைகள் மற்றும் துணியும், புஷ்பவள்ளி தனது 2 பேக்கில் 12 ஆயிரம் ரூபாய் பணமும் துணிகளும், இதர பொருட்களும் வைத்திருந்தது தெரியவந்தது. கொள்ளை போன நகைகளின் மதிப்பு சுமார் ஏழரை லட்சம் என தெரியவந்தது.
இது குறித்து போலீசார் அவர்களிருவரிடமும் திண்டுக்கல் காவல் நிலையத்தில் புகார் செய்யுமாறு கூறவே அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து துாத்துக்குடியிலேயே புகார் செய்து கொள்வதாக கூறியுள்ளனர்.இன்று காலை ரயில் துாத்துக்குடி வந்ததும் போலீசில் புகார் அளித்தனர். கொள்ளை நடந்த இடம் திண்டுக்கல் என்பதால் புகாரை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
பேக் கொள்ளை நடந்த எஸ் 12 கோச் முன்பதிவு செய்து செல்வதில் கடைசியில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கு பின்னால் முன்பதிவு செய்யாத பெட்டிகள் இருக்கும். எனவே ரயிலில் திருட்டு, கொள்ளை போன்ற செயலில் ஈடுபடுபவர்களுக்கு இது வசதியாக இருப்பதாக கூறப்படுகிறது.மேலும் முத்துநகர் எக்ஸ்பிரசில் நடக்கும் பெரிய கொள்ளை இது தான் .எனவே ரயிலில் பாதுகாப்புக்கு இருக்கும் போலீசார் இரவு நேரங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டுமென ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாஜக,அதிமுக கட்சிகள் இணக்கம், அரசுகள் அல்ல : காங்.,தலைவர் திருநாவுக்கரசர் பேட்டி
சனி 21, ஏப்ரல் 2018 8:48:25 PM (IST)

கடலில் தவறி விழுந்ததில் மீனவர் பரிதாப சாவு
சனி 21, ஏப்ரல் 2018 6:24:42 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரூ.5451 கோடி கடன் இலக்கு நிர்ணயம் : வருடாந்திர திட்ட அறிக்கை வெளியீடு
சனி 21, ஏப்ரல் 2018 4:05:32 PM (IST)

அங்கன்வாடியில் குழந்தைகளை பேணிகாத்து வளர்க்க வேண்டும்: மாவட்ட வருவாய் அலுவலர் பேச்சு!!
சனி 21, ஏப்ரல் 2018 3:49:07 PM (IST)

திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்கத் தடை : தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார்!!
சனி 21, ஏப்ரல் 2018 3:41:33 PM (IST)

தூத்துக்குடியில் 23ம் தேதி மனித சங்கிலி போராட்டம் : கீதாஜீவன் எம்எல்ஏ அறிவிப்பு
சனி 21, ஏப்ரல் 2018 12:56:36 PM (IST)

Tuticorianமே 5, 2017 - 12:04:46 PM | Posted IP 117.2*****