» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குடிநீர் திட்டப்பணிகளுக்காக கூடுதலாக ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு : அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தகவல்

வெள்ளி 21, ஏப்ரல் 2017 5:44:21 PM (IST)



தூத்துக்குடியில் கோடைக்கால குடிநீர் தேவையை போக்கும் பொருட்டு மாநில பேரிடர் நிதியிலிருந்து ஏற்கனவே ரூ.105 கோடி விடுவிக்கப்பட்டதோடு மேலும் ரூ.100 கோடி கூடுதலாக இன்றைக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்ட வறட்சி திட்டப்பணிகள் தொடர்பான அனைத்து துறை அலவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தினை மாவட்ட ஆட்சியர் எம்.ரவி குமார் தலைமையில் முதன்மை செயலாளர் / நில நிர்வாக ஆணையர் க.ராஜாராமன் முன்னிலையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு இன்று (21.04.2017) பங்கேற்று நடத்தினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு பேசும்பொழுது தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதல்வர் உத்தரவிற்கிணங்க அனைத்து மாவட்டங்களையும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் குடிநீர் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கண்காணிப்பு அலுவலர் முன்னிலையில் அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களால் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கையின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. மாவட்ட ஆட்சியர் ஒவ்வொரு பகுதியாக சென்று குடிநீர் பற்றாக்குறை குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

குடிநீர் பற்றாக்குறையால் அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தூத்துக்குடி மாவட்டமும் ஒன்று. மறைந்த முதல்வர் அம்மா தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக 4வது பைப் லைன் திட்டப்பணிகளை அறிவித்தார்கள். அதேபோல் கோவில்பட்டி பகுதிகளில் 2வது பைப் லைன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அனைத்து பணிகளும் ஜுன் மாதத்திற்குள்ளாக விரைந்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

குடிநீர் திட்டப்பணிகள் 100 சதவீதம் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். ஆய்வறிக்கையின் படி தேவைப்படும் கூடுதல் நிதி பெறப்பட்டு குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். தமிழ்நாடு அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சித்திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை தற்பொழுது 150 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் வறட்சி காரணமாக குடிநீர் பற்றாக்குறையை போக்க ஊரக வளர்ச்சித்துறையின் மூலமாக ரூ.350 கோடி ஒதுக்கீடு செய்து அதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதே போல் நகர்ப்புற பகுதிகளில் உள்ள குடிநீர் பற்றாக்குறையை போக்க நகராட்சி நிர்வாக துறைக்கு ரூ.170 கோடி ரூபாய் ஒதுக்கி குடிநீர் வழங்குவதற்கான பணிக் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறையின் மூலமாக நீர்நிலை ஆதாரங்களை மேம்படுத்த ரூ.28 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கோடைக்கால குடிநீர் தேவையை போக்கும் பொருட்டு மாநில பேரிடர் நிதியிலிருந்து ஏற்கனவே ரூ.105 கோடி விடுவிக்கப்பட்டதோடு மேலும் ரூ.100 கோடி கூடுதலாக இன்றைக்கு விடுவித்து அந்த பணிகளும் இன்றைக்கு தங்கு தடையின்றி குடிநீர் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பு வசதியுடன் கிடைக்க வேண்டும் என்பதற்காக செயல்படுத்தி வருகிறது. குடிமராமத்து திட்டம் 2016-17ம் ஆண்டு 30 மாவட்டங்களில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் 1519 குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் தற்பொமுது ரூ.300 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.

முன்னதாக வளர்ச்சித்திட்டப்பணிகள் மற்றும் குடிநீர் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் எம். ரவிகுமார் எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் உமாமகேஸ்வரி, மாநகராட்சி ஆணையர் இராஜாமணி, மாவட்ட வன அலுவலர் ராஜேஷ்குமார் ஜக்கேனியா, மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் வீரப்பன், சார் ஆட்சியர் தீபக் ஜேக்கப், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) பிச்சை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜையா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன் உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads



New Shape Tailors



CSC Computer Education


Johnson's Engineers

selvam aqua

Nalam Pasumaiyagam

Black Forest Cakes


Panchai Dairy



Thoothukudi Business Directory