» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கிருஷ்ணா நகரில் டாஸ்மாக் கடை வைக்க எதிர்ப்பு : பொதுமக்கள் போராட்டம்

வெள்ளி 21, ஏப்ரல் 2017 5:12:13 PM (IST)


கோவில்பட்டி அருகேயுள்ள கிருஷ்ணாநகர் பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இனாம்மணியாச்சி ஊராட்சிக்குட்பட்ட பகுதி கிருஷ்ணாநகர். இந்த பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானம் மற்றும் தனியார் பள்ளி ஆகியவை இயங்கி வருகிறது. இந்நிலையில் சாலைப்புதூரில் அகற்றப்பட்ட டாஸ்மாக் கடை இப்பகுதியில் அமைப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது. 

இதற்கு இப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டால் மக்களுக்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி அப்பகுதியை சேர்ந்தவர்க்ள மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ஜோதிபாசு, நகர செயலாளர் முருகன் ஆகியோர் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

selvam aqua

Nalam Pasumaiyagam

Johnson's Engineers

Black Forest Cakes


Panchai Dairy



New Shape Tailors




CSC Computer Education



Thoothukudi Business Directory