» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தெருவிளக்கு, குடிநீர் வசதி கோரி மக்கள் முற்றுகை: கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தில் பரபரப்பு

வெள்ளி 21, ஏப்ரல் 2017 5:03:35 PM (IST)



இலுப்பையூரணி செண்பகாநகர், சிந்தமணி நகர் பகுதியில் குடிநீர் மற்றும் தெருவிளக்கு வசதி கேட்டு அப்பகுதி மக்கள் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள இலுப்பையூரணி ஊராட்சிக்குட்பட்ட செண்பகாநகர், சிந்தமணிநகர், டி.எல்.எஸ் நகர் பகுதியில் உள்ள மக்களுக்கு குடிதண்ணீர் வழங்குவதற்கு ஊராட்சி நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், தெருவிளக்குகள் எதுவும் இல்லாத காரணத்தினால் இரவு நேரங்களில் இப்பகுதியில் வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது. 

மேலும் தெருவிளக்குகள் இல்லாத காரணத்தினால் சமூக விரோதிகள் அச்சுறுத்தல் இருப்பதாகவும், எனவே குடிநீர் வசதி மற்றும் தெருவிளக்கு வசதி செய்து தரக்கோரி அப்பகுதி மக்கள் ராமகிருஷ்ணன் என்பவர் தலைமையில் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்கள் கோரிக்கை அடங்கிய மனுவினையும் அளித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

Nalam Pasumaiyagam

selvam aqua

Black Forest Cakes



Universal Tiles Bazar

Pop Up Here

Johnson's Engineers


New Shape Tailors




Thoothukudi Business Directory