» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோழிப்பண்ணையில் பதுக்கிய 576 மதுப்பாட்டில்கள் பறிமுதல்: 2 பேர் கைது

வெள்ளி 21, ஏப்ரல் 2017 4:58:49 PM (IST)

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருேக கோழிப்பண்ணையில் பதுக்கிவைத்திருந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா உப்பத்தூரை சேர்ந்த கந்தசாமிமகன் கணேசன்(62). இவர் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தாலுகா பணைப்பட்டியில் கோழிப் பண்ணை வைத்துள்ளார். உப்பத்தூரை சேர்ந்த குருசாமி மகன் ராமசாமி(42). இவர் உப்பத்தூரில் கூல்டிரிங்ஸ் கடை நடத்தி வருகிறார். இவர்கள் இருவரும் பணைப்பட்டியில் உள்ள கோழிப் பண்ணையில் மதுப்பாட்டிகளை பதுக்கிவைத்து விற்பனை செய்வதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இதனையடுத்து தூத்துக்குடி ஏடிஎஸ்பி கந்தசாமி, எட்டயபுரம் இன்ஸ்பெக்டர் ராமையா, சிறப்பு உதவி ஆய்வாளர் அன்பரசன், தனிப்பிரிவு ஏட்டு ஜெய்சங்கர், காவலர்கள் சண்முகநாதன், சண்முகசுந்தரம் உள்ளிட்ட போலீசார் இன்று அதிகாலையில் பணைப்பட்டியில் உள்ள கணேசன் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் சோதனையிட்டனர். அப்போது அங்கு முறைகேடாக மதுப்பாட்டிகள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனையடுத்து அவர்களிடம் விசாரனை நடத்தியதில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு டாஸ்மாக் கடைகளில் இருந்து வாங்கிவந்து கோழிப்பண்ணையில் இருப்பு வைத்து அய்யாக்கோட்டையூர், உப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 576 மதுப் பாட்டில்களை பறிமுதல் செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Black Forest Cakes

Johnson's Engineers

CSC Computer Education




selvam aqua

Panchai Dairy

New Shape Tailors

Nalam Pasumaiyagam






Thoothukudi Business Directory