» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மகாபாரதத்தை இழிவுபடுத்தி பேசியதாக வழக்கு : நேரில் ஆஜராக நடிகர் கமலுக்கு நீதிமன்றம் உத்தரவு

வெள்ளி 21, ஏப்ரல் 2017 1:50:10 PM (IST)

மகாபாரதத்தை இழிவுபடுத்தி பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், நடிகர் கமலஹாசன் வரும் மே 5-ம் தேதி நேரில் ஆஜராக நெல்லை வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகர் கமல் ஹாசன், மகாபாரதத்தை இழிவுபடுத்தி பேசியதாக கூறப்படுகிறது. பெண்ணை வைத்து சூதாடியதை புத்தகமாக படிக்கும் ஊர் இது என்று கூறியிருந்தார். இதையடுத்து நடிகர் கமல் ஹாசன் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆதிநாதசுந்தரம் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது இவ்வழக்கில் நடிகர் கமலஹாசன் வரும் மே 5-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Johnson's Engineers

crescentopticals







Friends Track CALL TAXI & CAB (P) LTD






Thoothukudi Business Directory