» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புதுவாழ்வு சங்கம் சார்பில் உயர்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி!

வெள்ளி 21, ஏப்ரல் 2017 12:17:07 PM (IST)

நாலுமாவடி புதுவாழ்வுச் சங்கம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி முகாம் நாளை (சனிக்கிழமை) மாலை நடைபெறுகிறது.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் மற்றும் குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய பேழை புதுவாழ்வுக் குழந்தைகள் வளர்ச்சி மையத்தில் நாளை (ஏப்.22) சனிக்கிழமை மாலை 3.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மாணவ, மாணவியருக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், உயர் கல்வியில் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எவ்வளவு செலவாகும், என்ன வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பது குறித்து வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

இதில் தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு கல்வி ஆலோசகர் மற்றும் சமூக சேவகர் எம்.பிரகாஷ் கலந்து கொண்டு ஆலோசனை வழங்குகிறார். அனுமதி இலவசம். அனைத்து பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை அனுப்பி இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்துடன் இணைந்த புதுவாழ்வுச் சங்க நிர்வாகிகள் செய்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Johnson's Engineers


Friends Track CALL TAXI & CAB (P) LTD




crescentopticals








Thoothukudi Business Directory