» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சரள் மண் எடுக்க போலியாக ஆவணங்கள் தயாரிப்பு: ஆம் ஆத்மி புகார் - விசாரணைக்கு உத்தரவு

வெள்ளி 21, ஏப்ரல் 2017 8:54:12 AM (IST)

வல்லநாடு பகுதியில் உள்ள குளத்தில் அதிகாரிகள் உதவியோடு போலி ஆவணங்கள் மூலம் சரள் மண் எடுக்கப்பட்டதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து சார் ஆட்சியர் விசாரணை மேற்கொள்ள ஆட்சியர் ரவிகுமார் உத்தரவிட்டார்.
 
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் மு. வீரப்பன், வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) முத்துஎழில், சார் ஆட்சியர் தீபக் ஜேக்கப் உள்ளிட்ட அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் பேசியது;2015-16 ஆம் ஆண்டுக்கான தேசிய பயிர் காப்பீட்டு நிதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கோரம்பள்ளம் குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும், தாமிரவருணி ஆற்றில் இருந்து வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு தண்ணீர் எடுக்க நிரந்தர தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும்,  தற்போது விவசாயிகள் வறட்சி காரணமாக தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில்,  விவசாய நிலங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்றும், இல்லையென்றால் மாவட்ட நிர்வாகம் சார்பில் கருவேல மரங்களை அகற்றப்பட்டு நில உரிமையாளர்களிடமிருந்து  இருமடங்கு செலவு தொகை வசூல் செய்யப்படும் என அறிவித்திருப்பது பாதிப்பை ஏற்படுத்துவதாக விவசாயிகள் பலர் தெரிவித்தனர்.
 
விவசாயி பரமசிவன் பேசியது; கீழ வல்லநாடு ஊராட்சிக்குள்பட்ட பிராமணன் குளத்தில் இருந்து சரள் மண் எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஊராட்சி நிர்வாகத்துக்குள்பட்ட இந்த குளத்தில் பொதுப்பணித் துறை மூலம் சரள் மண் எடுக்க போலியாக ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு முறைகேடு நடைபெற்றுள்ளது என்றார்.
 
இதற்கு பதிலளித்த கோரம்பள்ளம் வடிநிலக் கோட்ட உதவி பொறியாளர் முருகன், அந்த குளம் பொதுப்பணித்துறை நிர்வாகத்தின் மூலம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கையகப்படுத்தப்பட்டுவிட்டதாக தெரிவித்தார். ஆனால், தவறான தகவல் தெரிவிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, பிராமணன் குளம் பிரச்னை தொடர்பாக சார் ஆட்சியர் விசாரணை மேற்கொள்வார் என்றும் விசாரணைக்குப் பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்தார். இதுதவிர, மாவட்டத்தில் பல்வேறு ஊராட்சிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து மாவட்ட ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் பலர் வலியுறுத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads
Universal Tiles Bazar

selvam aqua

New Shape TailorsJohnson's EngineersThoothukudi Business Directory