» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வ.உ.சி துறைமுக பள்ளிகளின் ஆண்டுவிழா : அடுத்த வருடத்தில் மாணவர்களுக்கு இலவச சீருடை

வியாழன் 20, ஏப்ரல் 2017 8:45:35 PM (IST)



வ.உ.சி துறைமுக பள்ளிகளின் ஆண்டுவிழாவில் அடுத்த வருடத்தில் இருந்து மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கப்படும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக கல்வி கழக நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் துறைமுக துவக்கப்பள்ளி, துறைமுக மேல்நிலைப்பள்ளி மற்றும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி ஆகிய பள்ளிகளின் ஆண்டு விழா துறைமுக மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கல்வி கழகத்தின் தலைவரும் துறைமுகத்தின் இயந்திரவியல் முதன்மை பொறியாளருமாகிய பி.ரவீந்திரன் வரவேற்புரை ஆற்றினார்கள்.பள்ளிகளின் ஆண்டறிக்கையை துறைமுக மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ரொசாரி யூஜின் சகாயராஜ் சமர்ப்பித்தார்.

வ.உ. சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழக தலைவர் மற்றும் வ.உ. சிதம்பரனார் துறைமுக கல்வி கழகத்தின் தந்தையுமான ஆனந்த சந்திர போஸ் விழாவிற்கு தலைமை வகித்தார். புதிதாக அமைக்கப்பட்ட நவீன ஸ்மார்ட் வகுப்பு அறையை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டு முதல் பள்ளி மாணவர்களுக்கு இரண்டு சீருடை தொகுப்புகள் மற்றும் காலணிகளையும் இலவசமாக வழங்குவதற்கான அறிவிப்பினை விழா மேடையில் தெரிவித்தார்.

இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும், பி.ரவீந்திரன், தலைவர், வ.உ.சிதம்பரனார் துறைமுக கல்விக் கழகம், டி.எஸ். அசோக்குமார், துணைத் தலைவர், வ.உ.சிதம்பரனார் துறைமுக கல்விக் கழகம், டாக்டர் கே. பேபி ராணி, செயலர், வ.உ.சிதம்பரனார் துறைமுக கல்விக் கழகம், ராமசாமி, துணை போக்குவரத்து மேலாளர், துணைச் செயலர், வ.உ.சிதம்பரனார் துறைமுக கல்விக் கழகம், எம். இசக்கியம்மாள், பொருளாளர், வ.உ.சிதம்பரனார் துறைமுக கல்விகழகம் மற்றும் துறைமுக பள்ளி தலைமையாசிரியர் மற்றும் தலைமையாசிரியைகள் அனைவரும் சிறப்பாக செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

வார்டுகளை பிரிப்பது தொடர்பாக ஆலோசனை

திங்கள் 23, அக்டோபர் 2017 8:29:57 AM (IST)

Sponsored Ads



New Shape Tailors

Nalam Pasumaiyagam

selvam aqua

CSC Computer Education


Universal Tiles Bazar

Sterlite Industries (I) Ltd

Johnson's Engineers




Thoothukudi Business Directory