» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண்ணிடம் பணம் பறித்த இரண்டு வாலிபர்கள் கைது

வியாழன் 20, ஏப்ரல் 2017 8:22:04 PM (IST)

துாத்துக்குடியில் வேலைக்கு சென்று விட்டு வந்த பெண்ணிடம் பணம் பறித்த இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துாத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த சுரேஷ்குமார். இவரது மகள் சத்யபாலா (19).இவர் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் எட்டயபுரம் ரோட்டிலுள்ள ஒரு தனியார் கம்பனியில் பகுதி நேர வேலையும் பார்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று வேலை முடிந்து இரவு 9.30 மணியளவில் சத்யபாலா தனது வீட்டிற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.அப்போது பைக்கில் வந்த இரண்டுபேர் திடீரென அவரிடம் கைப்பையை பறித்து சென்றனர்.

அதில் செல்போன்,900 ரூபாய் பணம்,ஏடிஎம் கார்டு ஆகியவை இருந்துள்ளது.இது குறித்த புகாரின் பேரில் துாத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வந்தனர். இன்று மாலை இது தொடர்பாக துாத்துக்குடி வடக்கு சோட்டையன் தோப்பை சேர்ந்த கோட்டை சாமி மகன் புகழ்ராஜ் (24),கோமஸ் நகரை சேர்ந்த இருதயராஜ் மகன் சூர்யா (22),ஆகியோரை கைது செய்து பணம் செல்போனை பறிமுதல் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads







selvam aqua

New Shape Tailors


Johnson's Engineers

Universal Tiles Bazar





Thoothukudi Business Directory