» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோடை வெப்பம் அதிகரிப்பு.. குழந்தைகளே ஜாக்கிரதை : வெளியே செல்ல வேண்டாம்.. ஆட்சியர் அறிவுறுத்தல்!

வியாழன் 20, ஏப்ரல் 2017 12:01:37 PM (IST)

தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் காலை 11.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இது தொடர்பாக ஆட்சியர் ரவிகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும். தற்போது பருவமழை பொய்த்து விட்ட காரணத்தினாலும் ஆறு மற்றும் குளங்களில் தண்ணீர் இல்லாத காரணத்தினாலும் பொதுவாக வறண்ட வானிலை நிலவுகிறது. இதனால் வெப்பத்தின் அளவு இயல்பை விட அதிகமாக உள்ளது.இந்த கோடை வெப்பத்தினால் பச்சிளம் குழந்தைகள், சிறு வயது குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்கள் அதிக அளவில் பாதிப்படைய வாய்ப்புள்ளது.

கோடை வெயிலினால் அதிக வியர்வை வெளியேறும் பொழுது உடலில் உப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைசுற்றல், தசைப்பிடிப்பு, குறைந்த அளவு சீறுநீர் வெளியேற்றம், மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இதை தவிர்க்க அதிக அளவு நீர் பருக வேண்டும். தாகம் இல்லையென்றாலும் போதிய அளவு நீர் பருக வேண்டும். சூடான பானங்கள் பருகுவதை தவிர்க்கவும். அதிக அளவில் மோர், இளநீர், எலுமிச்சை பழச்சாறு மற்றும் ORS உப்புக்கரைசல்; ஆகியவற்றை பருகவேண்டும். அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் போதிய அளவு ORS உப்புக்கரைசல் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

கோடைக்காலத்தில் வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான தளர்ந்த பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். கருப்பு வண்ண ஆடைகள் அணிவதை தவிர்க்கவும். வெளியில் அதிமாக இருக்கும் நேரமான காலை 11.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் வெளியே வரும் பட்சத்தில் குடையை எடுத்து வர அறிவுறுத்தப்படுகிறார்கள். வெப்பம் அதிகமாக உள்ள திறந்த வெளியில் வேலை செய்யும் போது களைப்பு, மயக்கம், உடல் சோர்வு, தலைவலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவருக்கோ அல்லது ஆம்புலன்ஸ்கோ தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கூடுதல் தகவல்களுக்கு எண்:104-யை அணுகவும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து

tamilanApr 20, 2017 - 03:41:58 PM | Posted IP 106.2*****

thanks for collector

ABCDApr 20, 2017 - 02:22:25 PM | Posted IP 59.89*****

ழுசுளு கரைசல் ?

காயத்ரிApr 20, 2017 - 02:11:56 PM | Posted IP 59.89*****

முசுளு உப்புக்கரைசல் என்றால் என்ன ?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Johnson's Engineers




Nalam Pasumaiyagam

New Shape Tailors

selvam aqua


CSC Computer Education



Panchai Dairy

Black Forest Cakes



Thoothukudi Business Directory