» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி வழக்கறிஞர் சங்க தேர்தலுக்கு திடீர் தடை : உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

வியாழன் 20, ஏப்ரல் 2017 11:32:02 AM (IST)

தூத்துக்குடியில் வருகிற 28ம் தேதி நடைபெற இருந்த வழக்கறிஞர் சங்க தேர்தலுக்கு இடைக்கால தடை வித்தித்து மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கத்தில் 2017-18ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளை தேர்வு செய்தவதற்கான தேர்தல் வருகிற 28ம் தேதி நடைபெற இருந்தது. இதில் தலைவர் பதவிக்கு ஆல்ட்ரின் மார்க்கஸ், கணபதி சுப்பிரமணியம், வாரியார் ஆகியோரும், செயலாளர் பதவிக்கு அசோக், செல்வின், மேலும் துணைத் தலைவர் பதவிக்கு 3பேரும், இணைச் செயலாளர் பதவிக்கு 4பேரும், பொருளாளர் பதவிக்கு 3பேரும், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 9பேரும் போட்டியிட்டனர். 

இந்நிலையில், இத்தேர்தலுக்கு தடை விதிக்க கோரி வழக்கறிஞர் சங்கரதாஸ் காந்தி என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார். அதில், ஆல் இந்தியா பார்கவுன்சில் விதிகளின்படி வாக்காளர் பட்டியலை முறையாக தயாரிக்கவில்லை, தேர்தலில் போட்டியிடும் சிலர் குற்றவாளிகள் பட்டியலில் உள்ளனர், சிலர் சொந்த தொழில் செய்து வருகிறார்கள், சங்க விதிகளை பின்பற்றவில்லை என மனுவில் தெரிவித்திருந்தார். மனுவை விசாரித்த நீதியரசர் ஜெயசந்திரன், ஜூன் 2ம் தேதி வரை தூத்துக்குடி வழக்கறிஞர் சங்க தேர்தலுக்கு இடைக்கால தடை வித்தித்து உத்தரவிட்டார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd




Nalam Pasumaiyagam

CSC Computer Education

selvam aqua

Johnson's Engineers

New Shape Tailors

Universal Tiles Bazar



Thoothukudi Business Directory