» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி ராணுவ வீரர் உடலுக்கு அமைச்சர் அஞ்சலி : இராணுவ மரியாதையுடன் உடல் நல்லடக்கம்

வியாழன் 20, ஏப்ரல் 2017 11:04:34 AM (IST)



அசாமில் விபத்தில் உயிரிழந்த தூத்துக்குடி ராணுவ வீரரின் உடல் முழு இராணுவ மரியாதையுடன் இன்று காலை அவரது சொந்த ஊரில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், முள்ளக்காடு அருகே, பொட்டல்காடு கிராமத்தைச் சார்ந்த குணசேகரன் - தேவி தம்பதியரின் மகன் முத்து சந்தனகுமார். ரானுவ வீரரான இவர், அசாமில் நடைபெற்ற விபத்தின் போது 18ம் தேதி மரணமடைந்தார் இவரது பூதஉடல் 19ம் தேதி கொளகாத்தியிலிருந்து சென்னைக்கும் பின்னர், சென்னையிலிருந்து மதுரைக்கும் விமானம் மூலம் கொண்டுவரப்பட்டது. பின்னர் மதுரையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், பொட்டல்காடு கிராமததிற்க்கு கொண்டு வரப்பட்டது.

அவரது உடலுக்கு தமிழக அரசின் சார்பில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஐூ, மாவட்ட ஆட்சியர் எம்.ரவிகுமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னிஷ், தூத்துக்குடி சார் ஆட்சியர் தீபக் ஜேக்கப் மற்றும் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் லெப்.கர்னல்.மு.நாகராஐன் (ஓய்வு), தேசிய மாணவர் படை 29-ம் பிரிவைச் சேர்ந்த ராணுவ அதிகாரி லெப்.கர்னல்.வெற்றிவேல் மற்றும் அரசு அலுவலர்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். 

தமிழக அரசின் சார்பில் அரசின் கருணைத்தொகை ரு.20லட்சத்திற்கான காசோலையினை படைவீரரின் தந்தை குணசேகரனிடம் தமிழக முதல்வரின் சர்பாக  தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஐூ வழங்கினார். மேலும் இராணுவ உயர் அலுவலர்களால் முழு இராணுவ மரியாதையுடன் முறைப்படி இன்று காலை 8:30 மணிக்கு பொட்டல்காடு கிராமத்தில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டது. ராணுவ வீரரின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில், அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

selvam aqua



Johnson's Engineers


Pop Up Here

New Shape Tailors

CSC Computer Education

Nalam Pasumaiyagam


Universal Tiles Bazar

Black Forest Cakes



Thoothukudi Business Directory