» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு : ஆட்சியர் தலைமையில் ஆலோசனை குழுக்கூட்டம்

வியாழன் 20, ஏப்ரல் 2017 10:17:43 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 6819 பேர் எழுதவுள்ள ஆசிரியர் தகுதி தேர்வு 2017க்கான ஆலோசனை குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் எம்.ரவி குமார் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு 2017க்கான ஆலோசனை குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் எம்.ரவிகுமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தாவது: 

மாவட்ட மையத்திலிருந்து வினாத்தாள் கட்டுக் காப்பக மையங்களுக்குமந்தனக் கட்டுக்களை பாதுகாப்பாக எடுத்துச்செல்லுதல், வினாத்தாள் கட்டுக் காப்பு மையங்களில் பாதுகாப்பு பணிகள், வழிதாட அலுவலர்கள் செல்லும் வாகனங்களுக்கு பாதுகாப்பு பணி, தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளிகளுக்கு தேர்வு நடைபெறும் நாட்களில் பாதுகாப்பு அளித்தல், தேர்வு மையங்கள் உடல் பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளும் பணிக்கு ஆண் மற்றும் பெண் காவலர்கள் நியமிக்கவும; 

விடைத்தாள்களை ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கொண்டு செல்லும் போது பாதுகாப்பு அளிக்கவும், தேர்வு மைய வளாகங்களுக்கு அருகில் ஒலி பெருக்கி கருவிகள் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்றும், அடையாள அட்டை அணியாத பணியாளர்களை அனுமதிக்கக்கூடாது என்றும் செல் பேச தடை விதித்தும், தேர்வு அறைகள் தவிர பிற அறைகள் பயன்பாட்டில் இருக்கக்கூடாது என்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை கேட்டுக்கொண்டார். காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தேர்வு நடைபெறும் பள்ளிகளில் தடையில்லா மின்சாரம் வழங்கிட தமிழ்நாடு மின்சார வாரியத்தை கேட்டுக்கொண்டார். 

ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும் நாட்களில் கிராமப்புற மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு உரிய நேரத்தில் வரும் வகையில் பேருந்து வசதி செய்தல் மற்றும் தேர்வு முடிந்தவுடன் மாணவர்கள் தன் இருப்பிடங்களுக்குச் செல்ல பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பேருந்து சம்பந்தமான தகவல்களுக்கு தொலைபேசி எண்: 9489052029, 9489052015 தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். தீயணைப்புத்துறையை வாகனங்களை தேர்வு நடைபெறும் நாட்களில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் ராஜேந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் எஸ.ஜெகவீரபாண்டியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) இராஜையா, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் சமுத்திரம், தீயணைப்பு அலுவலர் சண்முகம், முதன்மை கல்வி நேர்முக உதவியாளர் சங்கரையா, காவல் ஆய்வாளர் ஜெமின் லதா, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் செந்தூர்கனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

பாலாApr 20, 2017 - 12:05:52 PM | Posted IP 59.89*****

தவறை திருத்தவும்!!!

பாலாApr 20, 2017 - 12:04:22 PM | Posted IP 59.89*****

நான் டேட் எழுத S.A.V CENTRE போட்டு இருகாங்க ஆனா டேப்லே சென்டர் பெயர் இல்லை. கவனமாக தவறை திருத்தவும்!!!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Friends Track CALL TAXI & CAB (P) LTD








Johnson's Engineers

crescentopticals



Thoothukudi Business Directory