» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வீட்டு மின்இணைப்பு தவறான முறையில் உபயோகம் : 47 ஆயிரம் ரூபாய் அபராதம்

புதன் 19, ஏப்ரல் 2017 6:28:49 PM (IST)

உடன்குடி பகுதிகளில் மின்சார வாரிய அதிகாரிகள் நடத்திய அதிரடி ஆய்வில் வீட்டு மின்இணைப்பை தவறுதலாக பயன்படுத்தியதாக ரூ.47,537 அபராதம் விதித்தனர்.

திருச்செந்துார் கோட்ட தமிழ்நாடு மின்உற்பத்தி பகிர்மான கழகத்தின் சார்பில் உடன்குடி விநியோக பிரிவில் மாதாந்திர கூட்டுக்குழு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் 10 வீட்டு மின்னிணைப்புகளில் மின்சாரம் தவறான முறையில் வருவாய் இழப்பு ஏற்படும் வகையில் பயன்படுத்தியது கண்டறியப்பட்டு மொத்த இழப்பீட்டுத் தொகையாக ரூ.47,537 வசூல் செய்யப்பட்டது. 

மேலும் வீட்டு உபயோகத்திற்காக வழங்கப்பட்ட மின்னிணைப்புகளில் இருந்து மின்சாரம் எடுத்து வணிக உபயோகம், வீடு கட்டுமானம் மற்றும் வியாபாரம் உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது எனவும், மேலும் புதிதாக கட்டப்படும் வீடு மற்றும் கடைகளின் பணிக்கு தேவைப்படும் மின்சாரத்திற்கு சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலகத்தில் விண்ணப்பித்து உரிய மின்னிணைப்பு பெறப்பட வேண்டும் எனவும், விவசாய மின்னி ணைப்பையோ, வீட்டு மின்னிணைப்பையோ பயன்படுத்தி அதிலுள்ள கிணறு, மற்றும் ஆழ்துளை கிணற்றிலுள்ள நீரை தொழிற்சாலைகள் மற்றும் கடைகளுக்கு விற்பனை செய்யக் கூடாது. அவ்வாறு விதிமீறல் ஏற்படின் மின்திருட்டுக்கான அபராதம் வசூலிக்கப்படும் என திருச்செந்துார் மின்சார விநியோக பொறியாளர் பிரபாகர் கூறினார்.


மக்கள் கருத்து

stalonApr 19, 2017 - 11:32:40 PM | Posted IP 8.37.*****

இத அப்படிஏ விட்ராமா போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்கணும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

CSC Computer Education

selvam aqua

Universal Tiles Bazar


New Shape Tailors

Johnson's Engineers


Nalam Pasumaiyagam

Pop Up Here






Thoothukudi Business Directory