» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தடுப்பணை கட்ட எதிர்ப்பு - பொதுமக்கள் திடீர் மறியல் : தூத்துக்குடி - திருச்செந்தூர் ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு

புதன் 19, ஏப்ரல் 2017 12:22:39 PM (IST)

முக்காணியில் தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியிலில் ஈடுபட்டுள்ளதால் தூத்துக்குடி - திருச்செந்தூர் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

தாமிரபரணி ஆற்றுநீர் புன்னக்காயல் வழியாக வீணாக கடலில் கலக்கிறது. இதனை தடுக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா, மூக்காணி கிராமத்தில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் தடுப்பனை கட்டப்பட உள்ளது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த தடுப்பனையை புன்னக்காயல் அருகே கட்ட வேண்டும், என வலியுறுத்தி புன்னக்காயல், சேர்ந்தபூமங்கலம், உட்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் திருச்செந்தூர் மெயின் ரோட்டில் முக்காணி ரவுண்டானா அருகே சாலை மறியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்செந்தூர் கோட்டாட்சியர் தியாகராஜன் மற்றும் அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டு வரும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த மறியல் போராட்டத்தில் 150 பெண்கள் உட்பட சுமார் 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். மறியல் போராட்டம் காரணமாக தூத்துக்குடி - திருச்செந்தூர் ரோட்டில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.  வாகனங்கள் ஸ்ரீவைகுண்டம் வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டு வருகின்றனர். 


மக்கள் கருத்து

சுந்தரராஜ் விருதுநகர்.Apr 19, 2017 - 02:28:56 PM | Posted IP 8.37.*****

சாலை விதிகளை கடைபிடிக்க வென்றும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads






Johnson's Engineers




crescentopticals

New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory