» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கார் மோதி புது மாப்பிள்ளை உயிரிழப்பு : புதுப்பெண் உட்பட 2பேர் படுகாயம்

புதன் 19, ஏப்ரல் 2017 11:04:00 AM (IST)தூத்துக்குடியில் இன்று காலை தாறுமாறாக ஓடிய கார் மோதி புது மாப்பிள்ளை உயிரிழந்தார். இவ்விபத்தில் அவரது மனைவி மற்றும் என்எல்சி அனல்மின் நிலைய ஊழியர் படுகாயம் அடைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வீரகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேம்படிமுத்து மகன் பலவேசம் (27). இவருக்கும் தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் முருகேசன் மகள் ரேவதி (23) என்பவருக்கும் கடந்த 10ம் தேதி திருமணம் நடந்தது. புதுமணத் தம்பதியரான இருவரும் தூத்துக்குடியில் உள்ள மணமகள் வீட்டிற்கு மறுவீடு வந்துள்ளனர். மேலும், இன்று காலை திருமண ஆல்பத்திற்கு புகைப்படம் எடுப்பதற்காக இருவரும் தூத்துக்குடி ரோச் பூங்கா கடற்கரைக்கு சென்றனர். 

பின்னர் இருவரும் பைக்கில் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, தெற்கு கடற்கரை சாலையில் வந்தபோது பின்னால் வேகமாக வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, இவர்களது பைக் மீது மோதியது. பின்னர் தாறுமாறாக ஓடிய அந்த கார் மற்றொரு பைக் மீது மோதியது. பின்னர் அந்த கார் அங்குள்ள தடுப்புச்சுவரில் மோதி நின்றது. இந்த விபத்தில் புதுமாப்பிள்ளை பலவேசம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவ்விபத்தில் படுகாயம் அடைந்த அவரது மனைவி ரேவதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, கார் மோதியதில் மற்றொரு பைக்கில் வந்த, என்எல்சி அனல்மின் நிலைய ஊழியரான மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பேச்சியப்பன் மகன் சிவகுமார் (33), என்பவரும் படுகாயம் அடைந்தார். அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால், தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். 

விபத்து ஏற்படுத்திய காரை,  கேம்ப்–1 பகுதியை சேர்ந்த ரித்தீஷ் என்பவர்ஓட்டிவந்ததாக கூறப்படுகிறது. இவ்விபத்தில் அவரும் படுகாயம் அடைந்துள்ளதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருமணமான 10 நாட்களிலேயே ஆல்பத்திற்கு புகைப்படம் எடுக்கச்சென்ற புதுமணத் தம்பதியர் விபத்தில் சிக்கிய சம்பவம் அவர்களது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து

RAJAApr 20, 2017 - 07:24:03 PM | Posted IP 117.2*****

WE NEED SPEED BREAKER

RAJAApr 20, 2017 - 07:24:02 PM | Posted IP 117.2*****

WE NEED SPEED BREAKER

சுந்தர்Apr 20, 2017 - 04:53:06 PM | Posted IP 27.62*****

எனது நண்பனுக்கு ஆழ்ந்த இரங்கல்

KalyanApr 20, 2017 - 01:35:12 PM | Posted IP 157.5*****

Speed limit must

விதிApr 20, 2017 - 11:50:41 AM | Posted IP 103.3*****

தேவிடியா மகன்

NISHANTH AbiApr 20, 2017 - 11:47:04 AM | Posted IP 157.5*****

😢😢

KannanApr 20, 2017 - 10:39:28 AM | Posted IP 122.1*****

Helmet ku antha road la check pannura police daily athula sila pasanga pannura settaiya கவனிக்கணும்

vasanth .PApr 20, 2017 - 08:00:18 AM | Posted IP 107.1*****

காவல் துறை அவனுக்கு சரியான தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும்.

ராஜா ஆப்பில் டிவிApr 20, 2017 - 06:34:50 AM | Posted IP 168.2*****

என் நண்பா பலவேசம் ..... நீ எப்போதும் எங்கள் உள்ளத்தில் வாழ்ந்துகொண்டுருக்கின்றாய் ..

arunApr 19, 2017 - 10:42:56 PM | Posted IP 157.5*****

Anga neraya accident akuthu speed break podalam

KarthikApr 19, 2017 - 07:45:19 PM | Posted IP 157.5*****

Avna pudichu thukku la podunga sir. Ivney mathiri pasanga irukkirathu nala pala appavi uire la pothunga .........intha accident nadantha edathula nanum iruntha ....athanalatha soldra......

v.jαlαkkíαnApr 19, 2017 - 04:03:14 PM | Posted IP 157.5*****

ѕpєєd límít mαín fσr tαt rσαd. ѕtudєntѕ , чσungѕtєrѕ plz ѕtσp rαcєíng σn tαt вєαch rσαd...

Get DcruzApr 19, 2017 - 02:34:46 PM | Posted IP 157.5*****

Driver didn't run away. he was caught by the police on the spot itself. Police came to spot after 10 mins after the accident. The driver is the son of some officer who is working in TNEB tuticorin. Don't spread the fake news plz..

சுந்தரராஜ் விருதுநகர்.jApr 19, 2017 - 02:31:09 PM | Posted IP 8.37.*****

சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும்.

RajkumarApr 19, 2017 - 01:28:17 PM | Posted IP 122.1*****

Really very pity and sad. We are not in a position to blame any one. Since no one is not following road traffic. Basic road sense no one have. Even our Police authority advise the public abt safety of life, no one else take in right way. Specially the youngsters to be changed their basic attitude and think without ego. Let's pray for the changes of the attitude of all the people of Tuticorin. Will become a model city to others in the coming days.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsFriends Track CALL TAXI & CAB (P) LTDcrescentopticalsThoothukudi Business Directory