» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கோயிலில்தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வெள்ளி 14, ஏப்ரல் 2017 12:48:05 PM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

தமிழ் கடவுள் முருகப்பெருமான் கோயில் கொண்டுள்ள அறுபடை வீடுகளில் இரண்டாவதுபடை வீடாக திகழ்வது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இக்கோயிலில் தமிழ் புத்தாண்டு தினமான இன்று (14ம் தேதி) அதிகாலை 4 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு அதிகாலை 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதயமாத்தாண்ட அபிஷேகமும், அதனை தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது.

மேலும், சித்திரை விசுவை முன்னிட்டு காலை 10 மணிக்கு மூலவருக்கு அபிஷேகமும், சுவாமி சண்முகருக்கு அன்னாபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து 12 மணிக்கு உச்சிகால தீபாராதனையும், மற்ற காலை பூஜைளும் நடந்தது. தமிழ் புத்தாண்டு தினத்தையட்டி அதிகாலை முதலே பக்தர்கள் கடலிலிலும், நாழிகிணற்றிலும் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.  இதனையட்டி பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்யும் வகையில் பிரத்யோக வரிசை அமைக்கப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் வரதராஜன் ஆகியோர் செய்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads







Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors


Johnson's Engineers


crescentopticals



Thoothukudi Business Directory