» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

செண்பகவல்லி அம்மன் கோவிலில் பங்குனி திருவிழா தேரோட்டம் : கோவில்பட்டியில் கோலாகலம்

வியாழன் 13, ஏப்ரல் 2017 10:49:38 AM (IST)



கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் பங்குனி திருவிழா தேரோட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை கோலாகலமாக நடந்தது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர். ஒவ்வொரு திருநாளும் ஒவ்வொரு மண்டகபடிதாரர் சார்பில் கொண்டாடப்படுகிறது.

பங்குனித் திருவிழாவின், 9-ம் திருநாளான இன்று (வியாழக்கிழமை) கம்மவார் சங்கம் சார்பில் தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு ரதாரோகனம் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து காலை 9.05 மணியளவில் தேரோட்டம் துவங்கியது. தேரோட்ட விழாவில், செய்தி விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். தேரோட்டத்தில் ஆயிரக்கண்ககான பக்தர்கள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers
jesus redeems

Sponsored Ads



New Shape Tailors

Black Forest Cakes


Panchai Dairy

CSC Computer Education




Johnson's Engineers


Nalam Pasumaiyagam

selvam aqua



Thoothukudi Business Directory