» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வாலிபர் கொலை: நண்பர் வெறிச்செயல் .. நள்ளிரவில் பயங்கரம்..!!

புதன் 12, ஏப்ரல் 2017 10:47:58 AM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா புகைக்கும் தகராறில் நண்பரை அடித்துக் கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி கே.வி.கே. நகர் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் கணேசன் மகன் அருண் விஜயகுமார் (18). இவர் திருமணம் மற்றும் விழாக்களில் மேடை அலங்கரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர் அண்ணா நகர் 12வது தெருவைச் சேர்ந்தவர் சர்தார் மகன் லுக்மான் (22). இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் கஞ்சா புகைக்கும் பழக்கும் இருந்துள்ளது. 

இந்நிலையில், நேற்றிரவு கேவிகே நகர் அருகே இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. விஜயகுமார் லுக்மானிடம் கஞ்சா கேட்டு தகராறு செய்தாராம். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் சேர்ந்து அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், நேற்று அண்ணாநகர் 9வது தெருவில் உள்ள கோவில் கொடைவிழாவிற்கு சென்ற அருண் விஜயகுமார் நள்ளிரவு 2 மணியளவில் வீடுதிரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்து லுக்மான் இரும்பு கம்பியால் சராமாரியாக தாக்கியுள்ளார். 

இதில் தலை, கழுத்து பகுதிகளில் பலத்த காயம் அடைந்த விஜயகுமார், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதனிடையே விஜயகுமாரை கொலை செய்த லுக்மான், தென்பாகம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து விஜயகுமாரின் அண்ணன் அருண் முத்துமணி அளித்துள்ள புகாரின்பேரில் மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சம்பவ இடத்தை ஏஎஸ்பி செல்வன் நாகரத்தினம் பார்வையிட்டார். 


ரோந்து பணி  நிறுத்தம்.. பொதுமக்கள் அச்சம்


தூத்துக்குடியில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபடாததால் கொலை, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இரவு 10 மணிக்கே கடைகளை அடைக்குமாறு கூறுவதால் சமுக விரோதிகள் நடமாடுவது அதிகரித்துள்ளது. தற்போது காலை, மாலை, இரவு என மூன்று வேளைகளிலும் வாகன சோதனை என்ற பெயரில் ஹெல்மெட் அணியாதவர்களை பிடிப்பது மட்டுமே அவர்களது கடமை என்பது போல் செயல்படுகிறார்கள். 

இரவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடாததால் திருட்டு சம்பவங்கள், கொலை, வழிப்பறி நடப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தற்போது கொலை நடந்துள்ள பகுதியில் கோவில் கொடை விழா நடக்கிறது. கொடை விழாவிற்கும் போலீசார் போதிய பாதுகாப்பு அளிக்க அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. போலீசார் இரவு ரோந்து பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். 


மக்கள் கருத்து

ராஜன்Apr 14, 2017 - 11:27:15 PM | Posted IP 59.96*****

தூத்துக்குடி நகரத்துக்குள் வரிசையாக கொலைகள் நடப்பதற்கு காரணம் என்ன?

மக்கள்Apr 12, 2017 - 04:34:52 PM | Posted IP 122.1*****

கொள்ளை கும்பலின் ஆட்சியில் கொலையும் கொள்ளையும் தான் இனி நடக்கும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Johnson's Engineers

crescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors


Thoothukudi Business Directory