» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சக்தி வித்யாலயா பள்ளியில் பொங்கல் விழா

வியாழன் 12, ஜனவரி 2017 3:28:27 PM (IST)



தூத்துக்குடி சக்தி வித்யாலயா பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி மூன்றாவது மைல் சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவை பள்ளியின் நிறுவனர் சண்முகம் தொடங்கி வைத்தார். மாணவ மாணவியர்கள் தமிழர் பண்பாட்டை உணர்த்தும் வகையில் தமிழர்களின் பாரம்பரிய உடைகளை அணிந்து பொங்கலிட்டனர். கோலப் போட்டியும், ஓவியப் போட்டியும் நடத்தப்பட்டது.  

தூத்துக்குடி மாவட்ட சேவாபாரதியின் மாவட்ட இணைச் செயலாளர் கிருஷ்ணவேனி, சைன் யோகா ஆசிரியர் ஆகியோர் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு போட்டிகளுக்கு மதிப்பீடு செய்தனர்.  போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளியின் முதல்வர் ஜெயா சண்முகம் பரிசுகள் வழங்கினார். விழா நிறைவில் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.  விழாவிற்கான ஏற்பாடுகளை சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியின் துணை முதல்வர் ரூபி ரத்ன பாக்கியம் செய்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


crescentopticals




New Shape Tailors




Friends Track CALL TAXI & CAB (P) LTD

Johnson's Engineers




Thoothukudi Business Directory