» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பள்ளி மாணவியை மிரட்டிய கல்லூரி மாணவர் கைது
வியாழன் 12, ஜனவரி 2017 8:11:41 AM (IST)
கோவில்பட்டியில் பள்ளி மாணவியை கேலி செய்து, ஆசிட் ஊற்றி கொலை செய்துவிடுவதாக மிரட்டிய கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
கோவில்பட்டி அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்1 படித்து வரும் மாணவி, சம்பவத்தன்று மாலை பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாராம். பாண்டவர்மங்கலம் பசுவந்தனை சாலையில் உள்ள கிறிஸ்துவ ஆலயம் அருகே சென்று கொண்டிருந்த அவரை வழிமறித்து அதே ஊரைச் சேர்ந்த சமுத்திரப்பாண்டி மகன் ஸ்ரீவைகுண்டம் கலைக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வரும் விக்னேஸ்வரன் (20) என்பவர் கேலி செய்தாராம்.
இதையடுத்து, மாணவியின் தாய் விக்னேஸ்வரன் வீட்டுக்குச் சென்று அவரது பெற்றோரிடம் சொல்லி கண்டித்தாராம். இதையடுத்து விக்னேஸ்வரன் அந்த மாணவியின் வீட்டுக்கு சென்று, அவர் மீது ஆசிட் ஊற்றுவேன் என மிரட்டினாராம். இதுகுறித்து மாணவியின் தந்தை மேற்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து, பள்ளி மாணவியை கேலி செய்து ஆசிட் ஊற்றுவேன் என மிரட்டியதாக கல்லூரி மாணவரை கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எச்.ராஜா உருவ பொம்மையை எரித்த திமுக மகளிரணி
வியாழன் 19, ஏப்ரல் 2018 1:44:35 PM (IST)

துாத்துக்குடியில் பொதுமக்களை அச்சுறுத்தும் பள்ளம் : அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
வியாழன் 19, ஏப்ரல் 2018 1:31:57 PM (IST)

குடிநீர் பாட்டில்களின் தரத்தை இணையதளம் மூலம் அறியலாம் : போலிகள் குறித்து புகார் அளிக்கலாம்!
வியாழன் 19, ஏப்ரல் 2018 12:43:51 PM (IST)

குடிசை மாற்று வாரியத்தின் மூலம் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு: அமைச்சர், ஆட்சியர் அடிக்கல் நாட்டினர்!!
வியாழன் 19, ஏப்ரல் 2018 12:00:47 PM (IST)

ஸ்டெர்லைட் அதிகாரியின் கார் கண்ணாடியை உடைத்து லேப்டாப் திருட்டு: தூத்துக்குடியில் பரபரப்பு!!
வியாழன் 19, ஏப்ரல் 2018 11:32:22 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல துவக்கம்
வியாழன் 19, ஏப்ரல் 2018 11:20:17 AM (IST)
