» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காவல் நிலையத்தில் போலீசார் பைக்கிலேயே பெட்ரோல் திருடிய கில்லாடி சிறுவன்
புதன் 11, ஜனவரி 2017 8:24:50 PM (IST)
நித்திரவிளை போலீஸ் நிலையத்தில் போலீசாரின் மோட்டார் பைக்குகளில் பெட்ரோல் திருடிய கில்லாடி சிறுவனால் பரபரப்பு ஏற்ப்பட்டது .

இங்கு பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் போலீஸார் தங்கள் மோட்டார் பைக்குகளை போலீஸ் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர் .இந்நிலையில் கடந்த சில நாட்களாக இரவு பணிக்கு வரும் போலீஸார் பைக்கை நிறுத்தி விட்டு காலையில் பணிகள் முடிந்து வீட்டிற்கு செல்ல பைக்கை எடுக்கு போது பைக்குகள் ஸ்டார்ட் ஆகாமலும் வழியிலும் நின்று விடும்.
பின்னர் பார்த்தால் பைக்கில் பெட்ரோல் இல்லாமல் பைக் நிற்பது போலீஸாருக்கு தெரியவந்தது. மேலும் இதே நிலை தினமும் நடந்துள்ளது. இதனால் போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். போலீஸ் நிலையத்தில் நிறுத்தப்படும் பைக்கில் எப்படி பெட்ரோல் காணாமல் போகிறது என சந்தேகமடைந்தனர்.
இதனால் பைக்கில் எதும் கோளாறா என ஒர்க் ஷாப்பில் செக் பண்ணிய பின்னரும் பைக் பெட்ரோல் இல்லாமல் நிற்பது தொடர் கதையானது. மேலும் இரவு வாகன சோதனையில் பிடிக்கப்பட்டு போலீஸ் நிலையத்தில் நிறுத்தப்படும் வாகனங்களிலும் பெட்ரோல் காணாமல் போது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்ந்து நடந்து வந்ததால் போலீஸாருக்கு சந்தேகம் வந்தது.
இந்நிலையில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுப்பட்ட போலீஸார் பின்னர் போலீஸ் நிலையம் வந்து வாகனம் நிறுத்தும் இடத்தில் பைக்கை நிறுத்தும் போது அங்கு நிறுத்தப்பட்டிருநத பைக்கிலிருந்து சிறுவன் ஒருவன் பெட்ரோல் திருடி கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.போலீஸாரை கண்டது சிறுவன் திருடிய பெட்ரோலையும் அங்கே போட்டு விட்டு இருட்டில் தப்பியோடி விட்டான். போலீஸார் சிறுவனை தேடிய போது அவன் சிக்கவில்லை.
தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில் அந்த சிறுவன் அதே பகுதியை சேர்ந்தவன் என்பதும் அவன் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருவதும் தெரியவந்தது. இந்நிலையில் போலீஸார் தன்னை தேடுவதை அறிந்த சிறுவன் ஒரு வக்கீலுடன் காவல் நிலையம் வந்தான். பின்னர் சிறுவனுக்கு போலீஸார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். மேலும் போலீஸார் சிறுவன் குறித்து விசாரிக்கும் போது அந்த பகுதியில் உள்ள கடற்கரையில் நிற்கும் சைக்கிள்களை திருடி அதில் பெயிண்ட் அடித்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.
தற்போது பல்வேறு இடங்களில் பெட்ரோல் திருடுவதும் தெரியவந்தது .இதனால் சிறுவனுக்கு வேறு திருட்டு சம்பவங்களில் தொடர்பு இருக்கிறதா எனவும் போலீஸார் விசாரித்து வருகின்றனர் .
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் முற்றுகை!!
திங்கள் 23, ஏப்ரல் 2018 12:38:58 PM (IST)

குஜராத் காற்றலை நிறுவனத்திற்கு தடை விதிக்க வேண்டும்: ஆட்சியரிடம் மனு
திங்கள் 23, ஏப்ரல் 2018 12:29:53 PM (IST)

உணவு பிரியர்களை மகிழ்விக்க பானுபிருந்தாவன் ஹோட்டல் : பாளையங்கோட்டையில் திறப்பு
திங்கள் 23, ஏப்ரல் 2018 12:05:52 PM (IST)

குரும்பூர் அருகே பெற்ற தாயை அடித்துக் கொன்ற மகன் கைது
திங்கள் 23, ஏப்ரல் 2018 11:56:55 AM (IST)

கடற்கரையில் அழுகிய நிலையில் வாலிபர் சடலம் மீட்பு
திங்கள் 23, ஏப்ரல் 2018 11:51:59 AM (IST)

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை வீச்சு!!
திங்கள் 23, ஏப்ரல் 2018 11:44:17 AM (IST)
