» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

உடன்குடி,குலசை கோயில்களில் ஆருத்ரா தரிசன விழா

புதன் 11, ஜனவரி 2017 6:14:08 PM (IST)




உடன்குடி,குலசேகரன்பட்டினம் பகுதி கோயில்களில் ஆருத்ரா தரிசன விழா இன்று நடைபெற்றது.

குலசேகரன்பட்டினம் அருள்தரும் அறம் வளர்த்த நாயகி உடனுறை அருள்மிகு காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீஸ்வரர் திருக்கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி காலை 6 மணிக்கு நடராஜ பெருமான், மாணிக்கவாசகர், சிவகாமி அம்பாள் ஆகியோருக்கு 16 வகையான அபிஷேகங்கள்,18 வகையான சோடச,உபச்சார தீபாராதனைகள் நடைபெற்றது. இறைவனுக்கு உகந்த பால்,தயிர்,கோமியம்,கோஜலம் தருகின்ற பசுவை சிறப்பிக்கும் வண்ணம் பசுத் தீபாராதனை,கண்ணாடிச்சேவை நடைபெற்றது.

தொடர்ந்து நடராஜர்,சிவகாமி அம்பாள்,மாணிக்கவாசகர் ஆகியோர் ரதவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பக்தர்களுக்கு திருவாதிரைக் களி,கருப்புச் சாந்தும் வழங்கப்பட்டது.குலசேகரன்பட்டினம் சிதம்பரேஸ்வரர் திருக்கோயில்,உடன்குடி கண்டுகொண்ட விநாகர் திருக்கோயில்களிலும் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Joseph Marketing

New Shape Tailors





crescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory