» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புன்னைநகர் வனத்திருப்பதி கோவிலில் பொங்கல் திருநாள் சிறப்பு பூஜைகள்!

புதன் 11, ஜனவரி 2017 5:41:07 PM (IST)

புன்னைநகர்-வனத்திருப்பதி ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலில் தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகிலுள்ள புன்னைநகர்-வனத்திருப்பதி ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் வருகிற 14ம் தேதி (சனிக்கிழமை) தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு காலை 4 மணிக்கு நடைதிறப்பு, காலை 5 மணிக்கு மூலவர் திருமஞ்சனம், காலை 7 மணிக்கு சிறப்பு அலங்கார சேவை, ஜன. 15 ஆம்தேதி ஞாயிறுகிழமை மாலை 6.30 மணிக்கு மேல் பரிவேட்டைக்கு ஸ்ரீ ஸ்ரீநிவாசப்பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளல், மாலை 7 மணிக்கு திருவீதி உலா நடைபெறுகிறது.

திருநாள் சிறப்பு நாள்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை சென்னை ஓட்டல் சரவண பவனின் இனிப்பு ரவா கேசரி பிரசாதம் வழங்கப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை வனத்திருப்பதி கோயில் நிறுவனர் மற்றும் நிர்வாக கைங்கர்யதாரர் பி.ராஐகோபால், அவரது மகன்கள் பி.ஆர்.ஷிவக்குமார், ஆர்.சரவணன், கோயில் மேலாளர் வசந்தன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Nalam Pasumaiyagam


selvam aqua



CSC Computer Education





Black Forest Cakes





Thoothukudi Business Directory