» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாலுமாவடியில் 3 நாட்கள் உபவாச ஜெபம்: 14-ம் தேதி துவங்குகிறது

புதன் 11, ஜனவரி 2017 5:35:43 PM (IST)

தமிழகத்தின் ஆசீர்வாதத்திற்காக நாலுமாவடியில் 3 நாள்கள் உபவாச ஜெப முகாம் வருகிற 14 -ம் தேதி துவங்கி 16-ம் தேதி வரை நடைபெறுகிறது.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் மற்றும் குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடி தேவனுடைய கூடாரத்தில் பொங்கல் அரசு விடுமுறை நாட்களான ஜனவரி 14, 15, 16, (சனி, ஞாயிறு, திங்கள்கிழமை) ஆகிய 3 நாள்களில் தமிழகத்தின் ஆசீர்வாதத்திற்காகவும், இந்திய தேசத்தில் பொருளாதாரம் செழிக்கவும், நல்ல மழையை இறைவன் தரவும், விவசாயிகள் பாதுகாக்கப்படவும் வருகிற 14 ம் தேதி முதல் 16 ம் தேதி வரை உபவாசம் இருந்து  ஜெபம் செய்கின்றனர்.


இம்முகாமில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் சகோ.மோகன் சி.லாசரஸ், உடன் ஊழியர்கள் சகோ ஏ.அப்பாத்துரை, சகோ எஸ்.சாம் ஜெபராஜ், இராமநாதபுரம் இயேசுவின் தொனி ஊழிய நிறுவனர் சகோ. வின்சென்ட் செல்வக்குமார் ஆகியோர் செய்தி கொடுக்கின்றனர். இந்த சிறப்பு ஜெபமுகாமில் ஆராதனை வேளைகள், அனல் மூட்டும் தேவ செய்திகள், ஆசீர்வாதங்களைக் கொண்டு வரும் மன்றாட்டு ஜெப நேரங்கள், தனி ஜெப நேரங்கள், குழு ஜெப நேரங்கள் நடைபெறுகிறது. முகாமில் ஊழியக் குழுவினர் பாடல்கள் பாடுகின்றனர். ஏற்பாடுகளை ஊழியப் பொதுமேலாளர் செல்வக்குமார் தலைமையில் உடன் ஊழியர்கள் செய்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Pop Up Here

selvam aqua

CSC Computer Education

New Shape Tailors


Black Forest Cakes



Universal Tiles Bazar

Johnson's Engineers



Thoothukudi Business Directory